சேற்றுக்குள் ஸ்டன்ட் காட்டிய நடிகர் அஜித் என பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் அஜித் குமார் வலிமைப் படத்தின் சூட்டிங் போது சேற்றில் ஜீப் ஓட்டிய ஸ்டன்ட் காட்சி என இவ்வீடியோ முகநூல், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகியதால் சத்தியம் டிவி சேனலும் அதே வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
உண்மையில் வைரல் செய்யப்படும் வீடியோவில் இருப்பவர் நடிகர் அஜித் குமார் அல்ல. கேரளாவைச் சேர்ந்த samkalarickal என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 13-ம் தேதி இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
View this post on Instagram
வீடியோவில் பார்க்கையில், நடிகர் அஜித் குமார் போன்று வெள்ளை நிற தலைமுடி மற்றும் தாடியுடன் இருப்பதால் தவறாக நினைத்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், கேரளாவைச் சேர்ந்த ரைடரான சாம் குரியன் கலரிக்கல் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோவை நடிகர் அஜித் குமார் என தவறாக பரப்பி உள்ளனர் என அறிய முடிகிறது.