This article is from May 12, 2021

கொரோனாவால் “லொள்ளு சபா” மாறன் இறந்ததாக பரவும் தவறான செய்தி !

பரவிய செய்தி

கொரோனாவால் நடிகர் மாறன் உயிரிழப்பு.. கில்லி, தலைநகரம், ஏ1 போன்ற திரைப்படங்களில் நடித்த மாறன் கொரோனா பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் உயிரிழப்பு

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா பாதிப்பால் திரைப்பட துணை நடிகர் மாறன் இறந்ததாக செய்திகளில் வெளியாகி வருகிறது. அவரின் இறப்பிற்கு சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல் பதிவுகளில் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏ1 திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் ” லொள்ளு சபா” மாறன் உயிரிழந்ததாக சன்நியூஸ் செய்தியின் நியூஸ் கார்டும் சேர்ந்தே வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Archive link

ஏ1 திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தவரும், நகைச்சுவை நடிகருமான தங்கதுரை ” தவறான செய்தி மாறன் அண்ணன்கிட்ட இப்பதான் பேசினேன் நலமாக இருக்கிறார் ” என தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Archive link 

சன் நியூஸ் சேனலின் முகநூல் பக்கத்தில் பார்க்கையில், ” கொரோனாவால் நடிகர் மாறன் உயிரிழப்பு ! நடிகர் மாறன் கொரோனா பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் உயிரிழப்பு ! கில்லி, தலைநகர் போன்ற படங்களில் நடித்துள்ளார் மாறன் ” என நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.

ஏ1 திரைப்படத்தில் நடித்த மாறன் இறந்ததாக பரவும் நியூஸ் கார்டு ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதா அல்லது சன் நியூஸ் முகநூல் பக்கத்தில் தவறான புகைப்படத்துடன் வெளியிடப்பட்டு பின்பு நீக்கப்பட்டு இருக்கலாம். எனினும், அது குறித்து தெளிவாய் தெரியவில்லை.

Please complete the required fields.




Back to top button
loader