நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாக மீண்டும் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வெற்றி பெறும் போது, தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவர் ஆக நான் கூடாதா ? சீறும் பிரகாஷ்ராஜ்
மதிப்பீடு
விளக்கம்
திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், தெலுங்கு மற்றும் கன்னடர் இனப் பிரச்சனையை முன்னிறுத்தி பிரகாஷ் ராஜ் மீது எதிர்ப்புகள் வந்தன. அதற்காக, பிரகாஷ் ராஜ் கூட தனியாக பேட்டி அளித்து இருந்தார்.
அந்த பேட்டியில், தெலுங்கரான விஷால் தமிழ்நாட்டின் நடிகர் சங்கத் தலைவராக வெற்றி பெறும் போது நான் இங்கு வெற்றி பெறக் கூடாதா என கேள்வி எழுப்பியதாக செய்திகள் வெளியாகியது. அது பொய்யான செய்தி, பிரகாஷ் ராஜ் அப்படி எதுவும் கூறவில்லை என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : தெலுங்கர் விஷால் வெற்றி பெறும் போது நான் கூடாதா என பிரகாஷ் ராஜ் கூறினாரா ?
இந்நிலையில், ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வெற்றிபெறும் போது, தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவர் ஆக நான் கூடாதா ? என பிரகாஷ் ராஜ் கூறியது போன்று போலியான தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிடுவது தெலுங்கு நடிகர்கள் சங்கத் தேர்தலில், நியூஸ் கார்டில் தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவர் என செய்தி தெரியாமலேயே எடிட் செய்து இருக்கிறார்கள்.
தந்தி டிவியின் நியூஸ் கார்டில் தவறான செய்தியுடன் எடிட் செய்தது தெளிவாய் தெரிகிறது. தந்தி டிவி செய்தி நிறுவனமும் பரவும் போலியான நியூஸ் கார்டு குறித்து பதிவிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வெற்றிபெறும் போது, தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவர் ஆக நான் கூடாதா என பிரகாஷ் ராஜ் பேசியதாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்த போலியான செய்தி என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.