புகைப்படத்தில் இருப்பது நடிகர் செந்தாமரையும் ராஜாத்தி அம்மாளுமா?

பரவிய செய்தி
நடிகர் செந்தாமரை அவரது மனைவி ராஜாத்தி அம்மாள் மகள் கனிமொழி என புகைப்படத்துடன் செய்தி
மதிப்பீடு
சுருக்கம்
புகைப்படத்தில் இருப்பது செந்தாமரையின் மனைவி கௌசல்யா . அவரும் ஒரு நடிகை .
விளக்கம்
தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் கருணாநிதி பற்றி பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அதில் ஒரு புகைப்படத்துடன் நடிகர் செந்தாமரை அவரது மனைவி ராஜாத்தி அம்மாள் மகள் கனிமொழி என தவறாக பரப்பப்படுகிறது. கனிமொழியின் பெற்றோர் திரு.மு.கருணாநிதியும் ராஜாத்தி அம்மாளும் தான்.
உண்மையில் இது செந்தாமரையின் மனைவி கௌசல்யா செந்தாமரை. இவர் இன்றும் சீரியலில் நடித்து வருகிறார். மிகப்பிரபலமான வில்லன் நடிகரான செந்தாமரை அலெக்ஸ் பாண்டியன் , தம்பிக்கு எந்த ஊரு , தூரல் நின்னு போச்சு போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்தவர். இவரது மனைவி கௌசல்யா ஏறக்குறைய 48 வருடங்களாக நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு தனியார் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து இந்த செய்தியை இணைத்து பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் . இருவரும் சேர்ந்து நாடகம் நடித்துகொண்டிருக்கும் போது 54 வருடத்திற்கு முன்னரே திருமணம் செய்து கொண்டனர். நடிகர் செந்தாமரை இறந்து 25 வருடங்கள் ஆகி விட்டது இப்போது தனியாக வசித்து வருகிறார்.
யாராக இருந்தாலும் ஒருவரின் குடும்பத்தை பற்றி வீண் வதந்தி பரப்புவது நாகரீகமில்லை.