நடிகர் விவேக் தாயார் எப்போது இறந்தார் ?| வைரலாகும் கடந்த வருடப் பதிவுகள்.

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
நகைச்சுவை நடிகர் விவேக் உடைய தாயார் இயற்கை எய்தினார் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், நடிகர் விவேக் உடைய தாயார் இறந்தது கடந்த ஆண்டு ஜூலை மாதம்.
#Rip you Amma @Actor_Vivek #Valimai pic.twitter.com/unUQI4U9rX
— S. S. Thala Mani (@Priyamani2992) July 20, 2020
கடந்த சில மாதங்களாவே அவரின் புகைப்படங்களை பகிர்ந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு அவர் இறந்த போது பதிவிட்ட புகைப்படத்துடன் கூடிய பதிவை இப்பொழுதும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
2019 ஜூலை 17-ம் தேதி விவேக் தாயார் மணியம்மாள் (86) சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். சொந்த ஊரான சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரில் அவரின் உடல் நல்லடக்கம் செய்ய உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருந்தது.
கடந்த ஆண்டு இறந்தவருக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக கடந்த ஆண்டு பதிவையே புதிது போல பகிர்ந்து உள்ளார்கள். தவறான தகவல்களை பகிர வேண்டாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.