நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பார் என சீமான் கூறியதாக போலி செய்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
அப்படி மரியாதை செலுத்த சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பர் ” எனக் கூறியதாக சன் நியூஸ் செய்தியின் நியூஸ் வீடியோ டெம்பிளேட் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
சன் நியூஸ் செய்தியில், ” என்னுடைய இதயத்துக்கு மிகவும் நெருக்கமானவர் நடிகர் விவேக் – இரங்கல் தெரிவிக்கும் சீமான் ” தலைப்பில் சீமான் இரங்கல் தெரிவிக்கும் 2.42 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பர் என சீமான் கூறவில்லை.
” நடிகர் விவேக்கின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி ” என வெளியான இடத்தில் ஃபோட்டோஷாப் செய்து தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.