நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
தமிழக பாஜகவின் தீவிர ஆதரவாளரான நடிகை கஸ்தூரி, மக்கள் முதல்வர் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
மதிப்பீடு
விளக்கம்
நடிகை கஸ்தூரி முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்ததாகக் கூறி அவருடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று அதிமுகவினரால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
நடிகை கஸ்தூரி அவர்கள் தன்னை கழகத்தில் இணைத்து கொண்டார் ♥️ pic.twitter.com/VrOeF1a6wc
— அதிமுக.சூலூர் வினோத் (@VinothAIADMK) April 4, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செர்ச் செய்கையில், மே 12, 2020 அன்றே நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அப்பதிவில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறியதோடு, அவரைப் பற்றி புகழ்ந்து கூறி அதேநாளில் முகநூலிலும் பதிவு செய்திருக்கிறார்.
Birthday wishes to our respected CM Edappadi K Palaniswami . @CMOTamilNadu
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்து செய்தி முகநூலில்.https://t.co/GcpjOsNNvm pic.twitter.com/7LW3V6lpYq— Kasturi Shankar (@KasthuriShankar) May 12, 2020
இதற்கிடையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தவறாகப் பகிரப்பட்டு வரும் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, வீடியோ ஒன்றையும் பதிவிட்டு நான் அதிமுகவில் இணையவில்லை என்றும், தற்போது தான் தமிழ்நாட்டிலேயே இல்லை என்றும் அவ்வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி ஈபிஸ் திடீர் சந்திப்பு, லீக்கான ஃபோட்டோ! https://t.co/dHS1mZFWCP #admk #actresskasthuri #tamilnadupolitics #viralvideo #whatsappfwd #breakingnews
— Kasturi Shankar (@KasthuriShankar) April 5, 2023
மேலும் படிக்க: கல்யாண் ராமன் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக தவறாக பரப்பிய செல்வ குமார் !
நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாகப் பரப்பப்பட்டதைப் போன்று இதற்கு முன் கல்யாண் ராமன் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வ குமார் அவர்களால் பரப்பப்பட்ட தவறான செய்தி குறித்தும் யூடர்ன் கட்டுரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
நம் தேடலில், நடிகை கஸ்தூரி அதிமுக கட்சியில் இணைந்ததாகத் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அவ்வாறு பரப்பப்படும் பதிவுகளில் இடம்பெற்ற புகைப்படம் மே 12, 2020 இல் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் பதிவில் இடம்பெற புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.