அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கரை நியமித்ததாகப் பரவும் போலி அறிக்கை

பரவிய செய்தி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் குழு ஆலோசகராக கழக உறுப்பினர். பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன் – எடப்பாடி பழனிசாமி
மதிப்பீடு
விளக்கம்
மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக கட்சியின் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக அறியப்படும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மதுரையில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவரது ஆதரவு பக்கங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், சவுக்கு சங்கரை அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்து உள்ளதாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
😂😂😂😂😂
யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை கோப்பால் … பெரிய உண்மை விளம்பி … pic.twitter.com/RADfkkHgQv
— 🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 (@pablo_twtz) August 19, 2023
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் பரவும் தகவல் குறித்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், ஆகஸ்ட் 19ம் தேதி சவுக்கு சங்கர் குறித்தோ அல்லது மாநாடு குறித்தோ எந்தப் பதிவுகளும் இல்லை. இறுதியாக ஆகஸ்ட் 16ம் தேதியே பதிவுகள் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதியே இறுதியாக அறிக்கை வெளியாகி இருக்கிறது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/Sm8px08TLL
— AIADMK (@AIADMKOfficial) July 11, 2023
எனவே, பரவும் அதிமுக அறிக்கை பக்கத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2023 ஜூலை 11ம் தேதி அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைவது குறித்து வெளியான அறிக்கையே கிடைத்தது. இந்த அறிக்கையில், சவுக்கு சங்கர் குறித்து போலியாக எடிட் செய்து பரப்பி உள்ளனர்.
மேலும் படிக்க : தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம் எனப் பரவும் போலிச் செய்தி !
மேலும் படிக்க : சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு !
இதற்கு முன்பாக, தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம் எனப் போலிச் செய்திகள் வெளியாகின. அதேபோல், சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு கட்டுரையும் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கரை நியமித்ததாகப் பரவும் அறிக்கை போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.