நொறுக்குத்தீனி, உணவு இடைவேளையுடன் களைகட்டிய அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

பரவிய செய்தி

அட வெக்கங் கெட்டவங்களா இதுக்கு எதுக்கு டா உண்ணாவிரத நாடகம்..

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட விஷச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், விஷச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை செய்ய கோரியும் அதிமுக சார்பில் கடந்த 27ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உணவு மற்றும் நொறுக்குத்தீனி சாப்பிட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

பரவி வரும் வீடியோவில், “நொறுக்குத்தீனி, உணவு இடைவேளை மற்றும் நடனத்துடன் அதிமுகவின் உண்ணாவிரதம் களைகட்டியது. நொறுக்குத்தீனியுடன் உண்ணாவிரதத்தை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் உணர்ச்சிமிக்க போராட்டம் ஜாலியான போராட்டமாக மாறியது” என்று கூறப்படுவதையும் கேட்க முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், வீடியோவின் மேல் பாதியில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் சமீபத்தில் ஜூன் 27ஆம் தேதி அன்று அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் எடுக்கப்பட்டதுதான் என்பதை உறுதிசெய்ய முடிந்தது.

அதேசமயம் பரவி வரும் வீடியோவில் கீழே காட்டப்பட்டுள்ள வீடியோ குறித்து தேடியதில், கடந்த 2018 ஏப்ரல் 06ஆம் தேதி அன்று, தினமலர் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் “AIADMK hunger strike Troll : உண்ணும் விரதம் : வைரல் போட்டோஸ் | Admk hunger strike drama” என்று குறிப்பிட்டு செய்தியாக வெளியிடப்ப்ட்டிருந்தது. இதில் பரவி வரும் வீடியோவின் காட்சிகள் அப்படியே பொருந்தின.

இதன்மூலம் கடந்த 2018ஆம் ஆண்டில் தினமலர் அதிமுகவின் அப்போதைய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து நையாண்டியாக வெளியிட்டிருந்த வீடியோவை, சமீபத்தில் நடைபெற்ற அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்தோடு தொடர்புபடுத்தி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து திமுகவினரே போராட்டம் நடத்துவதாக பரவும் 2020ம் ஆண்டு செய்தி!

மேலும் படிக்க: பிபிசியின் மோடி ஆவணப்படத்திற்கு எதிராக பிரிட்டன் மக்கள் போராட்டம் எனப் பரவும் தவறான வீடியோ !

முடிவு:

நம் தேடலில், அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் உணவுகள் வழங்கப்பட்டதாகப் பரவும் வீடியோ, கடந்த 2018ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader