This article is from Nov 05, 2021

தாலிபான்கள் மறுத்ததால் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது நபியே ஸ்பான்சர் செய்தாரா ?

பரவிய செய்தி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு Sponsorship செய்ய தலிபான்கள் மறுத்துவிட்டனர். ஆனாலும் அந்த அணியின் Captain Mohammad Nabi தனது சொந்த சேமிப்பு பணத்தின் மூலம் T20WorldCupக்கு கொண்டுவந்து இருக்கின்றார்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதற்கிடையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்க தேவையான ஸ்பான்சரை செய்ய தாலிபான்கள் மறுத்ததாகவும், ஆகையால் அந்த அணியின் கேப்டன் முகமது நபி தனது சொந்த சேமிப்பு பணத்தின் மூலம் அழைத்து சென்று விளையாடி வருவதாக ஓர் தகவல் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

Twitter link | Archive link

உண்மை என்ன ?

2021 அக்டோபர் 14-ம் தேதி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில், ” 2021 ஐசிசி டி20 உலககே கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் தேசிய அணியின் ஸ்பான்சர்ஷிப் உரிமைகளை சிடிகிகுரூப் அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. $4,50,000 உடன் ஏலத்தில் அதிக தொகையுடன் வெற்றி பெற்ற சிடிகிகுரூப் ஆப்கானிஸ்தான் தேசிய அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் ” என வெளியிடப்பட்டு இருக்கிறது.

Twitter link | Archive link

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் உடையில் அந்த அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சரான சிடிகி குரூப் உடைய லோகோ இடம்பெற்று உள்ளதையும் பார்க்கலாம்.

அதேபோல், தாலிபான்கள் மறுத்த காரணத்தினால் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது நபி ஸ்பான்சர் செய்ததாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

Twitter link | Archive link  

மேலும், தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தன் ட்விட்டர் பக்கத்தில், ஆப்கானிஸ்தான் அணி நமீபியாவிற்கு எதிராக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்ய தலிபான்கள் மறுத்துவிட்டதால் அந்த அணியின் கேப்டன் முகமது நபி தனது சொந்த சேமிப்பு பணத்தின் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு அணியை அழைத்து சென்றதாக பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader