ஏழை மாணவர்களின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை எண்கள் !

பரவிய செய்தி

வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதிப்போடும்படி கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

மதிப்பீடு

விளக்கம்

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை குறித்து தமிழக மக்கள் பலரும் அறிந்து இருப்பீர்கள். வறுமையின் காரணமாக படிப்பினை தொடர முடியாத ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் அகரம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், கிராமப்புறத்தில் இருந்து முதல் பட்டதாரியாகிய மாணவி தாம் கடந்து வந்த பாதைக் குறித்து பகிர்ந்து கொண்ட பொழுது நடிகர் சூர்யா கண்கலங்கிய சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதையடுத்து, தற்பொழுது நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை உடைய தொடர்பு எண்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

Twitter link | archived link 

Advertisement

2019 பிப்ரவரி 12-ம் தேதி நடிகர் சூர்யா உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,  ” ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் ! தகுதியான மாணவர்களை அகரத்திற்கு அடையாளம் காட்டுங்கள். ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரியில் உயர் கல்வி பெற அகரம் ஃபவுண்டேஷன் கடந்த பத்தாண்டுகளாக துணைபுரிகிறது. பெற்றோர்களை இழந்த, ஆதரவற்ற, வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

இதுவரை 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2019 ஆம் ஆண்டு ப்ளஸ் டூ எழுதுகிற மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த, ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் போகிற மாணவர்களை கீழ்க்காணும் அகரம் ஃபவுண்டேஷன் அலுவலக எண்ணிற்குத் தொடர்பு கொள்ள செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். ப்ளஸ்டூ மாணவர்களின் வகுப்பறை கரும்பலகையில் இந்த தொடர்பு எண்களை எழுதிப் போடும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி ” என பதிவிடப்பட்டு இருந்தது.

அகரம் அறக்கட்டளையின் அலுவலக எண்களான 80561 34333 மற்றும் 98418 91000 ஆகியவை தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button