This article is from Sep 11, 2019

இனி வங்கிகளில் விவசாய நகைக் கடன் நிறுத்தம் | காரணம் என்ன ?

பரவிய செய்தி

வங்கிகளில் இனி விவசாயத்திற்கு நகைக் கடன் கிடையாது எனத் தகவல்.

மதிப்பீடு

விளக்கம்

வங்கிகளில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட உள்ளதாக வெளியான செய்தி சமூக வலைதளங்களில் கண்டங்களை பெற்று வருகிறது. வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக் கடன் குறைக்கப்பட்டு, அக்டோபர் 1-ம் தேதி முதல் 4 சதவீதத்தில் நகைக் கடன் வழங்கும் திட்டம் இருக்காது என வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகளில் குறைந்த வட்டியான 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதில், முறையாக கடனை திரும்ப செலுத்தும் நபர்களுக்கு 3 சதவீத வட்டித் தொகை மானியமாக திரும்ப வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் 1 லட்சம் ரூபாய் வரையிலும், நிலம் சார்ந்த ஆவணங்களை சமர்ப்பித்து 3 லட்சம் வரை கடன் பெற முடிகிறது.

” விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்கும் திட்டத்தை விவசாயிகள் மட்டுமின்றி இதர வாடிக்கையாளர்களும் தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதுமட்டுமின்றி, குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய மத்திய அரசு 5 சதவீத தொகையை வழங்கும். தற்பொழுது பட்ஜெட்டில் அதற்கான தொகை நிறுத்தப்பட்டு உள்ளதால் வங்கிகள் நஷ்டமடையும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் விவசாய நகைக் கடனை நிறுத்த அனைத்து வங்கிகளும் திட்டமிட்டு உள்ளதாக ” வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்கும் திட்டம் நிறுத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறி வருகிறார்கள்.

எனினும், 9 சதவீத வட்டியில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும் நகைக்கடன் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மன்னார்குடியில் ஊடங்களுக்கு பேட்டி அளித்த அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர், தேசியமயமாக்கப்பட்ட, வணிகமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கும் விவசாய கடன்களை அக்டோபர் 1-ம் தேதி முதல் நிறுத்த இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என்று குற்றச்சாட்டியுள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader