ஏர் இந்தியா நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுகிறதா ?

பரவிய செய்தி

அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் நிரந்தரமாக பணி நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்திய அரசின் உத்தரவின்படி நிறுவனம் மூடப்படுவதால் ஊழியர்கள் புதிய பணியை தேடிக் கொள்ளும்படி அறிவித்துள்ள கடிதம் ஒன்று ஊழியர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

ஏர் இந்தியா நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக இணையத்தில் அந்நிறுவனத்தின் பெயரில் பரவிய கடிதம் போலியானவை என ஏர் இந்தியா மற்றும் விமானப் போக்குவரத்து செயலாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விளக்கம்

2018 ஆகஸ்ட் 25-ம் தேதியிட்ட ஊழியர்களுக்காக ஏர் இந்தியா நிறுவனம் பெயரில் வெளியான கடிதத்தில், “ அரசின் உத்தரவால் ஏர் இந்தியா நிறுவனம் அக்டோபர் 1-ம் தேதி முதல் நிரந்தரமாக பணி நிறுத்தம் செய்யப்படுகிறது “ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

குறிப்பாக, அதில் அனைத்து நிரந்தர ஊழியர்களுக்கான இழப்பீடு பற்றிய அறிவிப்பானது முடிவு செய்யப்படும். நிலையை உணர்ந்து ஊழியர்கள் மாற்று வேலையை தேடிக் கொள்ளும்படி அந்த கடிதம் எடுத்துரைக்கிறது. இணையத்தில் ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படுவதாக பரவியக் இக்கடிதத்தால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இடையே அச்சம் உருவாகியது.

குறிப்பாக, வாட்ஸ் ஆஃப் தளத்தில் அதிகம் பரவியுள்ளது. விமான சேவையை நிறுத்திக் கொள்வதால் பலர் வேலையை இழக்கும் நிலை உருவாகும் என்பது மிக முக்கியமான தகவல். ஆனால், இக்கடிதம் போலியானவை என தெரிய வந்துள்ளது.

இக்கடிதம் பற்றி அறிந்து உடனடியாக ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் ஆகஸ்ட் 24-ம் தேதி ட்விட்டர் பதிவு ஒன்று பதிவிடப்பட்டது.

“ விமானப் போக்குவரத்து செயலாளர் R.N.Choubey மற்றும் ஏர் இந்தியா சேர்மன் P.S Kharlo ஆகியோர் ஏர் இந்தியா பற்றி பரவும் கடிதமானது போலியானவை என உறுதி செய்துள்ளனர். மேலும், அரசு தரப்பில் இருந்து பொறுப்பு உள்ளதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது “

Advertisement

ஏர் இந்தியா நிறுவனம் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்திப்பதாகவும், 48,000 கோடி கடன் சுமையில் இருப்பதாகவும் தகவல்கள் பரவுவதால் இக்கடிதம் உண்மை என பலரையும் நினைக்க வைத்துள்ளது.

“ ஏர் இந்தியா நிறுவனம் மரபு பிரச்சனையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. ஏர் இந்தியாவின் கடன் நிலையில்லாமல் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது. ஏர் இந்தியாவை தவிர, யாராலும் கடனை சமாளிக்க முடியாது. எந்த விமான சேவையும் கடன் இல்லாமல் சேவை வழங்குவது சாத்தியமில்லை ” என இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகஸ்ட் 22-ம் தேதி தெரிவித்து இருந்தார்.

ஏர் இந்தியாவின் ஊழியர்களை அச்சம் கொள்ள வைக்க வேண்டும் என்றே சிலரால் செய்யப்பட்ட குற்றத்துக்குரிய செயல் இது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button