Aircel வாடிக்கையாளரா நீங்கள் ? இதை செய்யுங்கள்.

பரவிய செய்தி
தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்செல் சேவை முடங்கியது. நெட்வொர்க் மாற இயலாத நிலையில் மக்கள்.
மதிப்பீடு
விளக்கம்
ஏர்செல் சேவை முடங்கியதில் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9000 செல்போன் டவர்களில், 6500 டவர்களில் வாடகை பிரச்சனை காரணமாக சிக்னல் தடையினால் டவர் ஏஜென்சியிடம் ஏர்செல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தவிர்க்க முடியாத தொழில்நுட்ப கோளாறு காரணத்தினால் சேவையில் தடங்கல் ஏற்பட்டதாகவும் விரைவில் சரி செய்ய முயற்சித்து வருவதாவும் ஏர்செல் நிறுவனம் தங்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து வருகிறது.
எர்செல்லை முற்றிலும் மூடி விட்டார்கள் , PORT செய்து வேறு நெட்வொர்க் மாற முடியாது, மொபைல் எண்ணை இழந்துவிடுவீர்கள் என்று செய்தி பரவி வருகிறது.
யாரும் பதட்டமடைய வேண்டாம் ! அருகில் இருக்கும் ஏர்செல் ஸ்டோர்க்கு முறையான அடையாள மற்றும் முகவரி ஆவணத்துடன் சென்று PORT தொடர்பான உதவியைப் பெறலாம்.
ஏர்செல் ஸ்டோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் வேறு வழி கண்டிப்பாக இருக்கிறது. இதற்கு முன்னர் சேவையை நிறுத்திய மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் மாற்றிக்கொள்ள TRAI கால அவகாசம் கொடுத்து வழி செய்தது.
அதேபோல் தமிழகத்தில் ஏர்செல் பிரச்சனை தீரும் பட்சத்தில் சேவையை திரும்ப பெறலாம் அல்லது வேறு நெட்வொர்க் மாற்றி விடலாம்.