டிராகன் போன்று பறக்கும் விமானத்தின் புதிய வடிவமைப்பு எனப் பரவும் அனிமேஷன் வீடியோ !

பரவிய செய்தி
விமான வடிவமைப்பு பல புதிய முயற்சிகளில் இதுவும் ஒன்று..
மதிப்பீடு
விளக்கம்
புதிய விமான வடிவத்தைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் வளைவான வடிவங்களுடன் டிராகன் போன்ற தோற்றத்தில் உள்ள விமானம் ஒன்று, விமான ஓடு தளத்திலிருந்து பறந்து செல்வதைப் போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
விமான வடிவமைப்பு
பல புதிய முயற்சிகளில் இதுவும் ஒன்று pic.twitter.com/ftuk5cYeog— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) September 12, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவில் உள்ள விமானம் உண்மையாக உருவாக்கப்பட்டதல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் இந்த வீடியோவின் கீபிரேம்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், இந்த வீடியோவை உருவாக்கியவரின் சமூகவலைதளப் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.
Aircraft_experiment_amit_rana என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 13 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவை காண முடிந்தது.
View this post on Instagram
மேலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்ததில், அவர் சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த விமானத்தைப் போன்றே, பல விமான வடிவங்களை அனிமேஷன் வீடியோவாக உருவாக்கியுள்ளார் என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் படிக்க: கடலுக்கு அடியில் காட்சி தரும் துவாரகை எனப் பரவும் அனிமேஷன் வீடியோ
மேலும் படிக்க: கனடாவில் ராட்சத மீன் தாக்கி கப்பல் உருக்குலைந்ததாகப் பரப்பப்படும் தவறான வீடியோ !
இதற்கு முன்பாகவும், பல்வேறு அனிமேஷன் வீடியோக்கள் உண்மை என பரப்பப்பட்டு உள்ளன. அவை குறித்தும் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், புதிய விமான வடிவத்தைப் பாருங்கள் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ போலியானது என்பதையும், இது அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.