உ.பி-யில் சிறுமியை வன்புணர்வு செய்தனை சுட்டுப்பிடித்த ஐ.பி.எஸ் அதிகாரி !

பரவிய செய்தி

உத்தரப்பிரதேசத்தில் 6 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தவனை என்கவுண்டர் செய்து ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் ஷர்மா அதிரடி !

மதிப்பீடு

விளக்கம்

நாடு முழுவதிலும் பெண் பிள்ளைகளுக்கு நேரிடும் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வன்கொடுமை சம்பவங்கள், அதனால் ஏற்படும் துயரங்கள் பற்றி எத்தனை செய்திகளும், வழக்குகளும் வந்தாலும் கூட நடக்கும் வன்கொடுமைகளுக்கு முடிவில்லை.

Advertisement

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனை ஐ.பி.எஸ் அதிகாரி அஜய் ஷர்மா என்பவர் என்கவுண்டர் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

எனினும், பதிவின் உண்மைத்தன்மையை ஆராய, என்கவுண்டர் குறித்து செய்திகளை தேடுகையில் டைம்ஸ் நவ் உள்ளிட்ட செய்தி இணையதளங்களில் அஜய் ஷர்மா குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன. மே 7-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்டத்தில் நஜில் என்ற நபர் 6 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து சென்றுள்ளான்.

இந்நிலையில், குற்றவாளியை தேடிவந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி குற்றவாளியை பிடித்துள்ளனர். இந்த வாரம் திங்கள் அன்று ஐபிஎஸ் அதிகாரி அஜய் ஷர்மா தலைமையில் சென்ற காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குற்றவாளி நஜில்-க்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

குற்றவாளியை சுட்டுப் பிடித்த பிறகு காயம் காரணமாக குற்றவாளியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளியால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலையும் காவல்துறை கைப்பற்றி உள்ளனர்.

Advertisement


குற்றவாளியை சுட்டுப்பிடித்த அஜய் ஷர்மாவின் செயலுக்கு நாடு முழுவதிலும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 23-ம் தேதி கீழ்கண்டவாறு அஜய் ஷர்மா பதிவிட்டு இருந்தார்.

முடிவு :

உத்தரப்பிரதேசத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நஜில் என்ற குற்றவாளியை அஜய் ஷர்மா தலைமையிலான போலீஸ் படை சுட்டுப்பிடித்து உள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான. எனினும், சில பதிவுகளில் குற்றவாளி என்கவுண்டரில் இறந்து விட்டதாக தவறாக பதிவிட்டு வருகின்றனர். குற்றவாளி உயிருடன் இருக்கிறார் என்பதே உண்மை !

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
Close
Close