நடிகர் அஜித் வலிமை படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான வீடியோவா ?

பரவிய செய்தி
வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் !
#Valimai shooting spot#அய்யோ_அம்மா_பைக்_ரேஸ் pic.twitter.com/oZlkrDvPmz
— adirs SeeKa (@maasterda) February 19, 2020
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ” வலிமை” திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற சூப்பர் பைக் ஸ்டண்ட் காட்சிகளின் பொழுது விபத்தில் சிக்கியதாக செய்திகளில் வெளியாகியது.
இந்நிலையில், நடிகர் அஜித் விபத்தில் சிக்கிய காட்சியென வீடியோ ஒன்று முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது அஜித் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து செய்திகளில் வெளியாகி இருக்கிறது. எனினும், வைரல் செய்யப்படும் வீடியோ போன்று படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என எதுவும் வெளியாகவில்லை.
அஜித் விபத்துக்குள்ளான காட்சி என வைரல் செய்யப்படும் வீடியோவிற்கும், வலிமை திரைப்படத்திற்கும் சம்பந்தமே இல்லை. 2012-ம் ஆண்டில் ” Motorbike Crashes into Boat ” என்ற தலைப்பில் வெளியான வீடியோவையே தற்போது பரப்பி உள்ளனர்.
இதற்கு முன்பாக, 2012 டிசம்பர் 1-ம் தேதி Moto journal எனும் பிரெஞ்சு பத்திரிகையின் யூடியூப் சேனலில் Yamaha FJR 1300 சோதனையின் பொழுது விபத்து நிகழ்ந்ததாக குறிப்பிட்டு இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
வலிமை படப்பிடிப்பில் சின்ன பைக் விபத்தில் அஜித் சிக்கியதாகவும், ஆனால் பெரிதாய் காயங்கள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. எனினும், சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் கூறியதாகவும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.