நடிகர் அஜித் குமார் பகாசூரன் திரைப்படத்தை பாராட்டியதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
அஜித்தை கவர்ந்த பகாசூரன். மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தையும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய திரைப்படம் பாகாசூரன் இந்திய சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம் இது நடிகர் அஜித்குமார்
மதிப்பீடு
விளக்கம்
இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பகாசூரன் திரைப்படத்தை நடிகர் அஜித் குமார் பாராட்டியதாக அஜித் குமார் மற்றும், மோகன் ஜி இணைந்து இருக்கும் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், பிப்ரவரி 19ம் தேதி அஜித் மற்றும் மோகன் ஜி பற்றி பாலிமர் சேனலில் எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் பாலிமர் பதிவை பார்க்கையில், இன்ஸ்டாகிராம் பக்கப் பதிவு போல் உள்ளதால் பாலிமர் சேனலின் இன்ஸ்டா பக்கத்திலும் தேடினோம்.
View this post on Instagram
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் உள்ள எழுத்து வடிவமும், பாலிமர் செய்தியில் பயன்படுத்தப்படும் எழுத்து வடிவமும் வெவ்வேறாக இருக்கிறது.
பரப்பப்படும் நியூஸ் கார்டில் உள்ள அஜித் குமார், மோகன் ஜி மற்றும் பகாசூரன் போஸ்டர் இடம்பெற்ற புகைப்படம் கடந்த 2022 டிசம்பர் 6ம் தேதி UpdateNews360 எனும் இணையதள கட்டுரையில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
அஜித் சொன்ன அந்த வார்த்தை… ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்கள் ; பகாசூரன் இயக்குநர் வெளியிட்ட ரகசியம்!!#UpdateNews | #Bhagasuran | #Selvaraghavan | #CinemaNews | #MohanG | #BhagasuranTrailer | #Ajithkuamr | #UpdateNews360 https://t.co/hxRSaxpDjZ
— UpdateNews360 (@updatenews360) December 6, 2022
மோகன் ஜி இயக்கிய படத்தை நடிகர் அஜித் குமார் பாராட்டியதாக வதந்திகள் பரப்பப்படுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக திரெளபதி படம் வெளியான போதும் அஜித் குமார் பாராட்டியதாக வதந்திகள் பரப்பப்பட்டது.
வதந்திகளை நம்பாதீர்.. #திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே
— Mohan G Kshatriyan (@mohandreamer) January 13, 2020
2020 ஜனவரி 13ம் தேதி மோகன் ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” வதந்திகளை நம்பாதீர்.. திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், நடிகர் அஜித்தை கவர்ந்த பகாசூரன் எனப் பரப்பப்படும் பாலிமர் சேனலின் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.