நடிகர் அஜித் குமாரின் எடிட் செய்யப்பட்ட படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அமர் பிரசாத் !

பரவிய செய்தி

கிளாஸ் துணிவு !

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் துணிவு பட போஸ்டர்கள் மற்றும் அஜித் குமாரின் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” கிளாஸ் துணிவு ” என இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ? 

அமர் பிரசாத் பதிவிட்ட அஜித் குமாரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த 2021ம் ஆண்டு முகநூல் பக்கம் ஒன்றில் அதன் உண்மையான புகைப்படம் பதிவாகி இருப்பதை காண முடிந்தது.

Facebook link 

இணையத்தில் உள்ள புகைப்படத்தில் நடிகர் அஜித் குமாரின் தலையை மட்டும் எடிட் செய்து துணிவு திரைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

வைரல் செய்யப்படும் அஜித் குமாரின் இப்புகைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் சாலினி அஜித் குமார் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கங்களிலும் பதிவிடப்பட்டு உள்ளது.

Twitter link 

வைரல் செய்யப்படும் அஜித் குமாரின் இப்புகைப்படம் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு சில ட்விட்டர் பக்கங்களில் வெளியாகி உள்ளது.

Twitter link 

மேலும் படிக்க : விஜயின் வாரிசு பட ஃபர்ஸ்ட் லுக் ஓட்டோ விளம்பர போஸ்டரை காப்பி அடித்ததாக வதந்தி !

இதற்கு முன்பாக, நடிகர் விஜயின் வாரிசு படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் ஓட்டோ விளம்பர போஸ்டரை காப்பி அடித்ததாக வதந்தி பரப்பப்பட்டது. இதேபோல், நடிகர் அஜித் குமார் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : நடிகர் அஜித் குமார் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாகப் பரவும் வதந்தி !

முடிவு : 

நம் தேடலில், தமிழக பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் துணிவு திரைப்படத்தைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் அஜித் குமாரின் புகைப்படம் உண்மையானது அல்ல, எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader