This article is from Feb 17, 2020

அம்பேத்கர் படம் பொறித்த டி-ஷர்ட்டை அக்சய் குமார் அணிந்திருந்தாரா ?

பரவிய செய்தி

சல்யூட் Akshay kumar தமிழ் நாட்டில் இருக்கும் நடிகர்கள் அம்பேத்கர் tshirt போட மாட்டார்கள். ஏன்னா, தாழ்த்தபபட்டவன் என்ற முத்திரை, நமக்கு வந்து விடும் என்று பயந்து! வெட்கமாக இல்ல!

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

க.பவன் குமார் என்பவரின் முகநூல் பக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் அணிந்திருக்கும் வெள்ளை நிற டி-ஷர்ட்டில் சட்டமேதை அம்பேத்கர் உடைய உருவம் பொறிக்கப்பட்டு இருப்பதாக புகைப்படமொன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்கள் மற்றும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்களை பெற்று வைரலாகி வருகிறது.

Twitter link | archived link 

இதே புகைப்படத்தை அக்சய் குமார் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் பதிவில் Super Criminal  என்ற ரசிகர் பக்கத்தில் இருந்து பதிவிட்டு உள்ளதையும் பார்க்க முடிந்தது. முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரல் செய்யப்படும் அக்சய் குமாரின் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம்.

வைரல் செய்யப்படும் அக்சய் குமார் புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி Akshay Kumar FG எனும் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் அக்சய் குமாரின் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த புகைப்படம் பதிவாகி இருக்கிறது. அதில், அம்பேத்கர் உருவம் பொறிக்கப்படவில்லை.

Twitter link | archived link 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக Singh is Bliing என்ற திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் உள்ள டி-ஷர்ட்டில் அம்பேத்கரின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.




Back to top button
loader