வைரலாகும் மு.க.அழகிரியின் கண்ணீர் காட்சிகள்: கலைஞர் இறப்பின் பொழுது எடுக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இறந்த பின்பு அவரது உடல் கோபாலபுர இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தந்தையின் உடலை கண்டு கதறி அழும் மு.க.அழகிரி. இந்த வீடியோ காட்சிகளை ஊடகங்கள் ஏன் வெளியிடாமல் உள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

ஆகஸ்ட் 7-ம் தேதி முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதிஅவர்கள் இயற்கை எய்தினார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு பின்னால் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

கலைஞர் அவர்கள் இறந்த பின்பு அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்கு முன்பாக அவரது கோபாலபுர இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி சென்றனர். அந்நேரத்தில், தந்தையின் உடலை கண்ட மு.க.அழகிரி கதறி அழும் காட்சிகள் எனக் கூறி ஓர் வீடியோ பதிவு youtube, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

” துக்கமான தருணம் என்பதால் அதை உண்மை என நினைத்து அந்த காட்சிகளை மக்களும் அதிகம் பகிரத் தொடங்கின. ஆனால், மு.க.அழகிரி கண்ணீருடன் இருக்கும் அந்த காட்சிகள் கலைஞர் இறந்த பொழுது எடுக்கப்பட்டவை அல்ல. இதை வெளிப்படையாக கூற காரணம் ஊடகங்கள் ஏன் இதை வெளியிடவில்லை என்று கேள்வி எழுந்தற்காகவே..! ”

” மே 2015-ல் கலைஞரின் மூத்த சகோதரியும், முரசொலி மாறன் அவர்களின் தாயாருமான 99 வயதான சண்முகசுந்தரம் அம்மையார் இயற்கை எய்தினார் “

                                                                     

கோபாலபுரம் இல்லத்திலேயே அம்மையாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்பொழுது அங்கு வந்த மு.க.அழகிரி தனது அத்தையின் உடலுக்கு முன்பாக நின்று இழப்பை ஏற்க முடியாமல் அழுது உள்ளார். இந்த காட்சிகள் முழுவதும் முழுநீள வீடியோவில் பதிவாகி உள்ளது.

Advertisement

ஆனால், உடலை காண்பிக்காமல் அழகிரி அழும் காட்சி மட்டும் இடம்பெறும் 30 நொடி காட்சியை வெட்டி youtube இல் கருணாநிதி மரணத்தில் நிகழ்ந்தாக பதிவிட்டு உள்ளனர். அதையும் உண்மை என நினைத்து அந்த சிறு நொடிகள் வீடியோ காட்சியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் வைரலாகி உள்ளது.

ஒருவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று தான்..! ஆனால், தவறான பதிவு என்று அறிந்தும் சில youtube பக்கங்கள் அந்த பதிவுகளை நீக்காமல் இருப்பது பொய்களை பரப்பி பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற கீழ் எண்ணத்தை கொண்டுள்ளதை வெளிபடுத்துகிறது.

கலைஞரின் வாகன இருக்கை:

கலைஞரின் இறப்புக்கு பிறகு அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தில் உள்ள அவரது இருக்கையில் ஸ்டாலின் அவர்கள் அமர்ந்து பார்த்ததாக ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகியது.

ஆனால், இப்படமானது 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்திற்காக கலைஞர் அவர்கள் பயணிக்க தயார் செய்யபட்ட வாகனத்தை ஸ்டாலின் அவர்கள் பரிசோதித்து பார்த்த பொழுது எடுக்கப்பட்ட படமாகும். இதையும் தவறான செய்திகளுடன் ஃபேஸ்புக்கில் வதந்தியை பரப்பியுள்ளனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button