This article is from Nov 06, 2021

முகேஷ் அம்பானி குடும்பம் லண்டனில் குடியேற உள்ளதா ?

பரவிய செய்தி

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனில் சென்று குடியேற உள்ளதாக தகவல் ! பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோன் பார்க் பங்களாவை 592 கோடிக்கு அவர் வாங்கியுள்ளார். 2022 ஏப்ரல் மாதம் அங்கு குடும்பத்தினருடன் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனில் குடியேற உள்ளதாக இந்திய அளவில் செய்திகள் வெளியாகின. தமிழில் சன் நியூஸ் சேனல் வெளியிட்ட நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

முகேஷ் அம்பானி பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோக் பார்க் பங்களாவை 592 கோடிக்கு வாங்கி இருக்கிறார். ஆகையால், 2022 ஏப்ரல் மாதம் அங்கு குடும்பத்தினருடன் குடியேற உள்ளதாக பரவிய செய்திக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.

Facebook link | Media Statement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெளியிட்ட அறிக்கையில், ” அம்பானி குடும்பம் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் வசிக்கும் திட்டம் குறித்து சமீபத்தில் வெளியான செய்திகள் சமூக ஊடகங்களில் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் குடியேறவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறது.

மேலும், சமீபத்தில் ஸ்டோக் பார்க் தோட்டத்தை கையகப்படுத்திய RIL குழும நிறுவனமான RIIHL, பாரம்பரிய சொத்தை முதன்மையான கோல்ஃப் மற்றும் விளையாட்டு விடுதியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறது ” என விளக்கமாக தெரிவித்து இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், முகேஷ் அம்பானி குடும்பம் அடுத்த வருடம் லண்டனில் குடியேற உள்ளதாக பரவி வரும் செய்தியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மறுத்து உள்ளது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader