இந்தியாவின் வடக்கு, தெற்கு பற்றி அம்பேத்கர் கூறிய வாசகம் !

பரவிய செய்தி

வடக்கு, தெற்கு இடையே ஓர் பரந்த வேறுபாடு உள்ளது. வடக்கே இருப்பது பழமைவாதம், தெற்கே இருப்பது முற்போக்கானது. வடக்கில் மூடநம்பிக்கை உள்ளது, தெற்கில் பகுத்தறிவு உள்ளது. தெற்கு கல்வி ரீதியாக முன்னோக்கி உள்ளது, வடக்கு கல்வி ரீதியாக பின்தங்கியுள்ளது. தெற்கின் கலாச்சாரம் நவீனமானது. வடக்கின் கலாச்சாரம் பழமையானது – பாபாசாகிப் அம்பேத்கர்.

மதிப்பீடு

விளக்கம்

இந்திய மக்கள் வடக்கு, தெற்கு என பிரித்து பார்க்கப்படும் சூழல் இன்றும் மாறவில்லை. சுந்திரம் பெற்ற முதலே மொழி ரீதியில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிக்கு இடையே பெரிய வேறுபாடுகள் காணப்பட்டன. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை எனக் கூறினாலும் இங்கு வேற்றுமை மோலோங்கி காணப்படுகிறது என்றால் மிகையாகாது.

Advertisement

இந்தியாவின் வடக்கு, தெற்கு குறித்து சட்ட மேதை அண்ணல்.அம்பேத்கர் கூறிய வாசகம் என மேற்கண்ட கருத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. தற்போது, இப்பதிவு பகிர காரணம் நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தென் மாநிலங்களில் முடிவுகள் வேறுவிதமாக இருந்ததே!

வசந்த் மூன் என்பவரால் தொகுக்கப்பட்ட ” DR. BABASAHEB AMBEDKAR WRITINGS AND SPEECHES VOL. 1 ” என்ற புத்தகத்தில் 149-வது பக்கத்தில்,

வடக்கு, தெற்கு இடையே ஓர் பரந்த வேறுபாடு உள்ளது. வடக்கே இருப்பது பழமைவாதம், தெற்கே இருப்பது முற்போக்கானது. வடக்கில் மூடநம்பிக்கை உள்ளது, தெற்கில் பகுத்தறிவு உள்ளது. தெற்கு கல்வி ரீதியாக முன்னோக்கி உள்ளது, வடக்கு கல்வி ரீதியாக பின்தங்கியுள்ளது. தெற்கின் கலாச்சாரம் நவீனமானது. வடக்கின் கலாச்சாரம் பழமையானது ” – என்ற வாசகம் இடம்பெற்று உள்ளது.

இதைத் தவிர, Front Line தளத்தில் ஏப்ரல் 2010-ல் வெளியான ” Linguism Trap ” என்ற கட்டுரையிலும் அம்பேத்கரின் வாசகம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. .

இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இருந்தாலும், ஹிந்தியை தேசிய மொழி என பலரும் நினைத்து வருகின்றனர். மேலும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேசம் என கோஷங்கள் எழுப்புவர்களுக்கு, முதலில் இந்தியா ஒரே தேசமல்ல, அது பல இனக் குழுக்களின் ஒன்றியம், ஹிந்தி இந்தியாவின் அலுவல் மொழியே தவிர தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

Advertisement

இந்தியாவில் ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு இனத்திற்கும் தகுந்த மரியாதை அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button