தமிழ்
|
English
Fact CheckArticlesVideosAbout UsLogin
ஆர்.எஸ்.எஸ்-ல் அனைத்து சாதியினரும் சரிசமம் என அம்பேத்கர் கூறியதாகப் பரப்பப்படும் ஆதாரமில்லா தகவல் !
report_iconshare_iconsave_icon
YouTurn Login1 அக்டோபர், 2022
17k
1 நிமிடம்
17k
1 நிமிடம்
report_iconshare_icon
ஆர்.எஸ்.எஸ்-ல் அனைத்து சாதியினரும் சரிசமம் என அம்பேத்கர் கூறியதாகப் பரப்பப்படும் ஆதாரமில்லா தகவல் !
மதிப்பீடு
YouTurn Rating
விரைவான செய்திகளைப் பெற எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைக!
பரவிய செய்தி
ஆர்.எஸ்.எஸ் ஊழியர் முகாமிற்கு நான் வருவதற்கு இதுவே முதல்முறை. ஹரிஜனங்களுடன் மற்ற எல்லா ஜாதியினரும் சரிசமமாக வாழ்வதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எந்தவித வித்யாசத்தையும் இங்கு யாருமே நினைத்துக்கூட பார்க்கவேயில்லை" - டாக்டர் அம்பேத்கர்

மதிப்பீடு
YouTurn Rating
விரைவான செய்திகளைப் பெற எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைக!
விரிவான விளக்கம்
1939ம் ஆண்டு புனே நகரில் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடைபெற்றுக் கொண்டிருத்த போது பார்வையிட்ட டாக்டர் அம்பேத்கர், "ஆர்.எஸ்.எஸ் ஊழியர் முகாமிற்கு நான் வருவதற்கு இதுவே முதல்முறை. ஹரிஜனங்களுடன் மற்ற எல்லா ஜாதியினரும் சரிசமமாக வாழ்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். எந்தவித வித்யாசத்தையும் இங்கு யாருமே நினைத்துக்கூட பார்க்கவில்லை" என உணர்ச்சிப் பொங்க அம்பேத்கர் கூறியதாக ஓர் தகவல் சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் பல ஆண்டுகளாகப் பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?

இதன் உண்மைத்தன்மையை அறிய இணையத்தில் அம்பேத்கர் பேசியது குறித்துத் தேடி பார்த்தோம். அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சொற்பொழிவுகள் அனைத்தும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்ட ஒன்று. இவை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் இலவசமாகவே கிடைக்கும். அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சொற்பொழிவுகள் அனைத்தும் 17 தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எங்கும் ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு அவர் சென்றதாகக் குறிப்பிடப்படவில்லை.

மேலும், ஆர்.எஸ்.எஸ் குறித்து அம்பேத்கர் பேசியதாக தொகுதி 15ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், "ஆர்.எஸ்.எஸ் ஒரு ஆபத்தான அமைப்பு" என்றே அம்பேத்கர் கூறியுள்ளார்.



Document Link

அம்பேத்கர் எப்போதும் சாதியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் எதிராகவே தன்னை முன்னிறுத்தி இருந்தார். மனுஸ்மிருதியை எரித்ததில் இருந்து, இந்து மதத்தில் இருந்து புத்த மதம் மாறியது வரை தன்னை இந்து மதத்திற்கு நேர் எதிர் திசையிலே தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் முகாமிற்கு வந்ததாக வலதுசாரிகள் மற்றும் இந்துத்துவா அமைப்பினரால் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து வலதுசாரிகளால் எழுதப்பட்ட புத்தகங்களில் மட்டுமே இந்தக் கூற்று இருக்கிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரமாக எதும் இந்நாள் வரை வழங்கப்படவில்லை.

அம்பேத்கரின் எழுத்துகளில் எங்கும் தான் ஆர்.எஸ்.எஸ் முகாமிற்குச் சென்றதாக அவர் தெரிவிக்கவில்லை.

மேலும், இதுகுறித்துப் பதிவிட்ட தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யாவைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தார். இதற்கான ஆதாரத்தை அவர் அளிக்கும்பட்சத்தில் அதுகுறித்தும் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

முடிவு :

நம் தேடலில், அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் சொற்பொழிவுகளில் எங்கும் அவர் 1939ல் ஆர்.எஸ்.எஸ் முகாமிற்குச் சென்றதாக இடம்பெறவில்லை. வேறு எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் அவர் ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு சென்றதாக குறிப்பிடப்படவில்லை. ஆதாரமற்ற ஒன்றை பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.
whats_app_logo
விரைவான செய்திகளைப் பெற எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைக!
வாசகர் கருத்துகள்
இன்றே எங்களுடன் சேருங்கள்
சுதந்திரமான பத்திரிகையை ஆதரிக்கவும்
writing_icon