This article is from Jul 13, 2018

அம்பேத்கரின் அரியப் படம் என்று பரவிய வதந்தி..!

பரவிய செய்தி

அண்ணல் அம்பேத்கரின் இளமைப் பருவ அரியப் புகைப்படம்.

மதிப்பீடு

சுருக்கம்

அம்பேத்கரின் பருவக் காலத்து அரியப் புகைப்படம் என பரவிய இப்படங்கள் பிரபல அரசியல் தலைவரின் புகைப்படம். அதைப் பற்றி விரிவாக காண்போம்.

விளக்கம்

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் அரிதான பருவக் காலத்து படங்கள் எனக் கூறி இப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பழைய காலத்து கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை கண்டால் போதும், எது உண்மை ! எது பொய் ? என்று அறியாமல் பலரும் பகிர்ந்து விடுகின்றனர்.

விலாஸ்ராவ் தேஷ்முக் :

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் 1999 ஆம் ஆண்டில் முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகப்+ பொறுப்பேற்றார். மீண்டும் 2004-ம் ஆண்டில் முதல்வராகினார். இவரது ஆட்சி காலத்தில் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதால், அதற்கு பொறுப்பேற்று தாமாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர்.

1945-ல் பிறந்த விலாஸ்ராவ் தேஷ்முக் 2012-ம் ஆண்டில் சென்னையில் மரணித்தார். பிரபல அரசியல் தலைவரான விலாஸ்ராவ் தேஷ்முக் உடைய மூன்று மகன்களில் ஒருவரான ரித்தேஸ் தேஷ்முக் திரைப்பட நடிகர் ஆவார்.

விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிராவின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதால் அவருக்கென ரசிகர்கள் பலர் உள்ளனர். அதில், லாத்தூரை சேர்ந்த அஜய் போரதேபாட்டில் என்ற 27 வயது இளைஞர் விலாஸ்ராவின் மிகப்பெரிய ரசிகராவார்.

இவர் விலாஸ்ராவ் தேஷ்முக் பற்றி செய்திதாள்களில் வரும் படங்கள், அவரது அரியப் புகைப்படங்கள், அரசியல் மேடை நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகள் உள்ளிட்ட பலவற்றை அவரின் நினைவாக சேகரிப்பதை 12 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். விலாஸ்ராவ் பற்றி 2 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களை அஜய் சேகரித்து வைத்துள்ளார். இதில், லாத்தூரில் விலாஸ்ராவ் இறுதியாக பேசியதை அஜயே பதிவு செய்துள்ளார். அதை பொக்கிஷமாக கருதி வருகிறார்.

அஜய் பற்றி அறிந்த விலாஸ்ராவின் மகனான ரித்தேஸ் தேஷ்முக் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும்,விலாஸ்ராவ் 10-ம் வகுப்பு படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், விலாஸ்ராவ் உடன் அவரது மகன்கள் குழந்தைகளாக இருக்கும் புகைப்படத்தையும் ரித்தேஸ் தமக்கு அளித்ததாக அஜய் தெரிவித்துள்ளார்.

அஜய்க்கு வழங்கப்பட்ட விலாஸ்ராவ் படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை கூகுள் செய்து பார்த்தால் அறிய முடிகிறது. ஆக, அம்பேத்கரின் அரிதானப் புகைப்படம் எனக் கருதப்பட்டவை விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்களின் புகைப்படங்களே என்பதையம், வதந்திகள் எவ்வளவு எளிதாக பரவுகின்றன என்பதையம் புரிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader