அமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா ?

பரவிய செய்தி

அமெரிக்க போலீஸ் கருப்பா இருந்தா கைதா. முதலில் விசாரியுங்கள் அவர் ஒரு FBI உளவு துறை அதிகாரி. அதற்க்கு அப்புறம் மன்னிப்பு.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

அமெரிக்காவில் போலீசார் காவலில் இருந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தால் அந்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் நிகழும் போராட்டம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட்-க்காக நடைபெற்ற போராட்டத்தில் இருந்த ஒருவர் கருப்பாக இருந்ததால் அவரை போலீசார் கைது செய்துள்ளார். விசாரணையில் அவர் எஃப்.பி.ஐ  ஏஜென்ட் எனத் தெரிய வந்ததாக கீழ்காணும் வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், அந்த நபரை தாக்கி கையில் விலங்கை மாட்டிய பிறகு அவரின் பாக்கெட்டில் இருந்து எடுத்த அடையாள அட்டைப் போன்றதை பார்த்த பிறகு கை விலங்கை கழட்டி விடுகின்றனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ?  

ஜார்ஜ் ஃபிளாய்ட்-க்காக நடைபெற்ற போராட்டத்தில் தவறுதலாக ஃபெடரல் ஏஜென்ட் கைது செய்யப்பட்டதாக எந்த செய்தியும், பதிவுகளும் இல்லை. வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடிய பொழுது thisisnike எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் வீடியோ பதிவாகி இருக்கிறது.

Advertisement

Instagram link | archive link

மேற்காணும் இன்ஸ்டா பக்கத்தில், ” இந்த சம்பவம் ஓராண்டுக்கு முன்பாக நடந்தது. மினசோட்டா போலீஸ் துறையில் ஊழல் நிறைந்து இருந்தது. அமைதியாக சிகரெட்டை கூட பிடிக்க முடியாது ” எனக் குறிப்பிட்டப்பட்டு உள்ளது. எனினும், கைது செய்யப்பட்ட நபர் ஃபெடரல் ஏஜென்ட் எனக் குறிப்பிடவில்லை.

ஜூன் 1-ம் தேதி www.rochestermn.gov எனும் இணையதளத்தில் ரோசெஸ்டர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் இருந்து , ” ஒரு வருடத்திற்கு முன்பு ஜூன் 1, 2019 அன்று 1மணிக்கு ஒரு நிகழ்வில் இருந்த வீடியோ 2020 மே 30-ல் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கைது செய்ய வாரண்ட் இருப்பதாக அறியப்பட்ட ஒருவர் என நினைத்துள்ளனர். அதிகாரிகள் அவரின் அடையாளத்தை கண்டு பெயரைக் கேட்டார்கள். அதற்கு அந்த நபர் ஒத்துழைக்கவில்லை. அந்த நபரின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தடுப்புக்காவலின் போது வாரண்ட் வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு தேடப்படும் நபர் அல்ல எனத் தெரிந்த உடன் உடனடியாக விடுவிக்கப்பட்டார். மாறாக, சமூக ஊடகத்தில் வதந்திகள் பரவுகிறது, அந்த நபர் எஃப்.பி.ஐ ஏஜென்ட் இல்லை ” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா ?

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, 2020-ல் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டத்தில் எஃப்.பி.ஐ ஏஜென்ட் கைது செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோ தவறானது. அந்த நபர் எஃப்.பி.ஐ ஏஜென்ட் அல்ல, வைரலாகும் வீடியோ எடுக்கப்பட்டது ஜூன் 2019 என ரோசெஸ்டர் காவல்துறை விளக்கியுள்ளது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button