This article is from Jan 20, 2022

அமெரிக்காவில் உள்ள பிரபல நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூனா ?

பரவிய செய்தி

அமெரிக்காவில் உள்ள பிரபல நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன்.

modi cartoon

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

2014-ல் நரேந்திர மோடி பிரதமராகியது முதல் 2021 வரை அவர் விதவிதமான உடையில் இருப்பது போன்றும், அருகே காங்கிரஸ் எனக் குறிப்பிட்டு இருக்கும் மனிதர் கோட் சூட் உடையில் இருந்து பிச்சை எடுப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டு இருக்கும் கார்டூன் சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் உள்ள பிரபல நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன் எனக் குறிப்பிட்டு பரப்பப்படும் மேற்காணும் கார்ட்டூனை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மோடிக்கு அருகே இருக்கும் மனிதரை காங்கிரஸ் என்பதற்கு பதிலாக இந்தியா என்றும், எதுவுமே குறிப்பிடாமலும் கூட கார்ட்டூன் பகிரப்பட்டு இருப்பதை பார்க்க முடிந்தது.

Twitter link 

உண்மை என்ன ?  

அமெரிக்கா நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன் என வைரல் செய்யப்படும் கார்ட்டூன் படத்தை மட்டும் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 ஆகஸ்ட் 13-ம் தேதி Hindi Newsclick எனும் இணையதளத்தில் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு இக்கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருக்கிறது.

மேற்காணும் கார்ட்டூனில் வருடங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன, காங்கிரஸ், இந்தியா என எதுவும் இடம்பெறவில்லை. கார்ட்டூன் பதிவிற்கு கீழே உள்ள டக்களில் irfan ka cartoon என இடம்பெற்று இருந்தது. அவரது பெயரில் பல கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. கார்ட்டூனிஸ்ட் இர்பான் உடைய முகநூல் பக்கத்திலும் மோடி குறித்த அக்கார்ட்டூன் பதிவாகி உள்ளது.

Facebook link 

கார்ட்டூனிஸ்ட் இர்பான் நியூஸ் கிளிக்ஸ் செய்தி தளத்திற்கு பல கார்ட்டூன்களை உருவாக்கி உள்ளார். அவரது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து பல கார்ட்டூன்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சுதந்திர தினத்தில் பிரதமர் மோடியின் உடை அலங்காரத்தை விமர்சித்து வெளியிடப்பட்ட கார்ட்டூனை காங்கிரஸ் உடன் தொடர்புப்படுத்தி மாற்றி பரப்பி இருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், அமெரிக்காவில் உள்ள பிரபல நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன் எனப் பரவும் புகைப்படம் ஆனது அமெரிக்க நாளிதழால் வெளியிடப்பட்டது அல்ல, ஹிந்தி செய்தி நிறுவனத்தின் தரப்பில் வெளியான கார்ட்டூன். அதிலும், சாமானிய மனிதரை காங்கிரஸ் எனக் குறிப்பிடவில்லை, அது பிரதமர் மோடியை விமர்சித்து வெளியிடப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader