This article is from Apr 06, 2020

அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்து வேதங்கள் ஒலித்த வீடியோவா ?

பரவிய செய்தி

அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் இன்று இந்து வேதங்கள் ஒலிக்கப்பட்டன. எல்லாம் சிவமயம்.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் இன்று(ஏப்ரல் 2020) இந்து வேதங்கள் ஒலிக்க கூட்டத்தொடர் தொடங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில பதிவுகளில் கோவிட்-19 நோய்த்தொற்று உடன் வீடியோவை இணைத்து பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்து வேதங்கள் ஒலிக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் நேரத்தில் எடுக்கப்பட்டதோ அல்லது சமீபத்தியவையோ அல்ல.

twitter link | archived link 

வைரலாகும் வீடியோ குறித்து தேடிய பொழுது, 2018-ம் ஆண்டில் koena mitra என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் விர்ஜினியாவின் பாராளுமன்ற கூட்டத்தொடர் இந்து மந்திரங்கள் ஒலிக்க துவங்கப்பட்டது என பதிவாகி இருக்கிறது.

அமெரிக்க ஒன்றியத்தில் உள்ள விர்ஜினியா மாகாணத்தின் கூட்டத்தொடரில் விர்ஜினியா இந்து மையம் ரிச்மண்ட் கோவிலைச் சேர்ந்த பண்டித் ராஜகோபால் துப்பால் என்பவர் வேத மந்திரங்களை சமஸ்கிருதத்தில் கூறியதோடு ஆங்கில மொழியில் விளக்கத்தையும் படித்துள்ளார்.

Youtube link | archive link 

2018 ஜனவரி மாதம் விர்ஜினியா மாகாணத்தின் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது குறித்து அம்மாகாணத்தின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. வைரலாகும் வீடியோ 2018 மே மாதம் முதல் பரவத் தொடங்கி இருக்கிறது.

மேலும் படிக்க: ஜனவரி 14-ஐ பொங்கல் தினமாக அறிவித்தது அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா அரசு.

விர்ஜினியா மாகாணத்தில் பிற மாதங்களுக்கு, பிற இன மக்களின் பண்டிகைகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக 2018-ல் ஆண்டில் ஜனவரி 14-ம் தேதியை பொங்கல் தினமாக கொண்டாட விர்ஜினியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நம்முடைய தேடலில், 2018-ல் விர்ஜினியா மாகாணத்தின் சட்டசபை கூட்டத்தொடரின் போது இந்து பண்டிதர் வேத மந்திரங்களை ஒலிக்கச் செய்த வீடியோவே 2020-ல் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிகழ்ந்ததாக பரவி வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader