வைரலாகும் அமெரிக்காவில் நடந்த மோடி எதிர்ப்பு போராட்டத்தின் பழைய புகைப்படங்கள் !

பரவிய செய்தி
மதத்தின் பெயரால் இந்திய நாட்டை நாசமாக்கி கொண்டு இருக்கும் மோடிக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட அவமானம் இதை எந்த மீடியா வும் காட்டப்படவில்லை.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்ற போது அவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு காண்பிக்கப்பட்ட பதாகைகள், போராட்டத்தில் இருக்கும் மக்கள் என சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
பிரதமர் மோடி மற்றும் ஹிட்லர் முகத்தை இணைத்து இடம்பெற்று இருக்கும் பதாகைகள் உள்ளிட்ட புகைப்படங்கள் குறித்து தேடுகையில், அவை பிரதமர் மோடிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் எடுக்கட்டவையே, ஆனால் சமீபத்தியவை அல்ல.
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்ற அவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என தெரிய வந்தது.
2019-ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்ற நரேந்திர மோடிக்கு எதிராக காஷ்மீர் உள்ளிட்ட பல பிரச்சனைகளை குறிப்பிட்டு பதாகைகள் உடன் போராட்டம் நடைபெற்றது. தற்போது வைரலாகும் புகைப்படங்கள் அந்த போராட்டத்தில் எடுக்கப்பட்டவையே.
எனினும், சமீபத்தில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி சென்ற போதும் அவருக்கு எதிரான போராட்டம் நிகழ்ந்து இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என வைரல் செய்யப்படுபவை கடந்த 2019-ல் மோடி அமெரிக்காவிற்கு சென்ற போது நடைபெற்ற போராட்டத்தில் எடுக்கப்பட்டவை என அறிய முடிகிறது.