அமெரிக்காவில் 48 மணி நேரத்தில் நிகழ்ந்த கடும் பனிப் பொழிவின் டைம் லேப்ஸ் எனப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி

நியூயார்க் மாகாணத்தில் உள்ள பப்பலோ நகரத்தில் 48 மணிநேரத்தில் நடந்த கடும் பனிப்பொழிவை காட்டும் 60 வினாடி காணொளி.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பப்பலோ நகரத்தில் 48 மணி நேரத்தில் நிகழ்ந்த கடும் பனிப் பொழிவால் சாலையில் மலை போல பனி மூடி இருக்கும் 60 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி எனக் கூறி இவ்வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது.

Archive link

இந்த பனிப் பொழிவு வீடியோ குறித்து சூழலியல் ஆர்வலர் சுந்தர்ராஜன், முன்னணி செய்தி ஊடகமான NDTV உள்பட பதிவிட்டு இருந்தனர்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2016ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி Worse Than Chiggers யூடியூப் சேனலில் ” Beautiful 48 hour Time-Lapse of Blizzard ” எனும் தலைப்பில் இதே வீடியோ பதிவாகி உள்ளது. அதன் நிலைத்தகவலில், ” இந்த வீடியோ அமெரிக்காவின் வடக்கு வெர்ஜினியாவில் எடுக்கப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி டெய்லி மெயில் இணையதளத்தில், பனிப் பொழிவால் மூடப்பட்ட சாலையின் டைம் லேப்ஸ் வீடியோ குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது. அதில், ஜனவரி 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கடுமையான பனிப் பொழிவின் போது பதிவான வீடியோவில் இருந்து ஒவ்வொரு 30 நொடிகளுக்கு ஒரு ஃப்ரேம் எடுத்து இந்த டைம் லேப்ஸ் வீடியோ உருவாக்கப்பட்டதாக இடம்பெற்று இருக்கிறது.

2022 டிசம்பர் 27ம் தேதி வெளியான பிபிசி செய்தியின்படி, ” அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டியது. இதில், நியூயார்க்கின் பப்பலோ நகரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 28ஐ தாண்டியதாக ” குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், நியூயார்க் மாகாணத்தில் உள்ள பப்பலோ நகரத்தில் 48 மணிநேரத்தில் நடந்த கடும் பனிப்பொழிவை காட்டும் 60வினாடி காணொளி எனப் பரப்பப்படும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல. அந்த வீடியோ 2016ம் ஆண்டு அமெரிக்காவின் வடக்கு வெர்ஜினியாவில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader