அமித்ஷா, யோகி ஆதித்யநாத் மாஸ்க் அணியாமல் கும்பமேளாவில் கலந்து கொண்டார்களா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கும்பமேளாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாஸ்க் அணியாமல் நீராடியதாக இந்து மத சாமியார்கள் பலரும் கூட்டமாய் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் 2021 கும்பமேளா விழாவில் கலந்து கொள்ளவில்லை என பிபிசி செய்தியில் வெளியாகி இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2021 ஹரித்வார் கும்பமேளாவில் கலந்து கொண்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதுகுறித்து தேடுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற கும்பமேளா விழாவில் கலந்து கொண்ட செய்திகளே கிடைத்தன.
யோகி ஆதித்யநாத் மற்றும் அமித்ஷா நீராடும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்யா நகரில் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்து கொண்டதாக இப்புகைப்படம் நியூஸ் 18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் மாஸ்க் அணியாமல் கும்பமேளாவில் கலந்து கொண்டதாக பரவும் புகைப்படம் 2019ம் ஆண்டு நடைபெற்ற பிரயாக்யா கும்பமேளாவில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.