“நாட்டு நாட்டு” பாடலுக்கு ஏற்ப பொம்மலாட்டம்.. எடிட் செய்த வீடியோவை பதிவிட்ட ஆனந்த் மகேந்திரா !

பரவிய செய்தி
நாட்டு நாட்டு பாடலை பற்றி மற்றுமொரு ட்வீட். பகிராமல் இருக்க முடியவில்லை, இதுவே நாட்டு நாட்டு-வை பற்றிய கடைசி ட்வீட். உலகளாவிய பேசுபொருளாக மாறியதன் உண்மைச் சான்று, இப்பாடல் உலகத்தை தன் கையில் வைத்துள்ளது தான்.
மதிப்பீடு
விளக்கம்
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் எம்.எம் கீரவாணி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதைப் பெற்றது. இதையடுத்து இந்த பாடல் உலக முழுவதும் பேசுப்போருளாக உருவெடுத்தது. சமீபத்தில் டெஸ்லா கார்களின் விளக்குகள் நாட்டு நாட்டு பாடலுக்கு ஏற்ப மின்னிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நாட்டு நாட்டு பாடல் குறித்து ஆனந்த் மகேந்திரா தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்ட 2 நிமிட வீடியோவில், வெளிநாட்டில் சாலையோரத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஏற்ப பொம்மலாட்டம் (puppet dancing) செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
Ok. One last tweet, I promise, about #NaatuNaatu But couldn’t resist this one. Real evidence of it being a global phenomenon since it now has the whole world on its ‘strings’ 😊 pic.twitter.com/ex1bmf4Boh
— anand mahindra (@anandmahindra) March 22, 2023
ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த வீடியோ வைரலாகவே, அதற்கு நன்றிக் கூறி ஆர்ஆர்ஆர் படத்தின் அதிகராப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2017 ஆகஸ்ட் 21ம் தேதி ‘Aleksandar Stevanovic’ எனும் யூடியூப் சேனலில் ‘Despacito dancing Puppet!! (AMAZING)’ என்ற தலைப்பில் இவ்வீடியோ பதிவாகி இருப்பதை பார்க்க முடிந்தது.
இந்த வீடியோவில் உள்ள காட்சிகளே வைரல் வீடியோவிலும் இடம்பெற்று இருந்தன. ஆனால், அந்த பொம்மலாட்டம் டெஸ்பாசிட்டோ(Despacito) பாடலுக்கு ஏற்ப எடுக்கப்பட்டு இருக்கிறது.
….. You 🦋
+
….. Me, Puppet 🐶
+
….. Music 🎶
+
….. Despacito 💃=
Pure Happiness, Lovely ❤️ pic.twitter.com/YsKrUnQCde
— Aalok Gautam 🥰 (@Grtitude) August 29, 2017
இதே வீடியோ 2017 ஆகஸ்ட் 30ம் தேதி Aalok Gautam எனும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டு இருக்கிறது.
2017 டிசம்பர் 5ம் தேதி லாஃபிங் ஸ்க்விட் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், அலினா மெர்டிக் என்ற அற்புதமான தெருக் கலைஞர் லூயிஸ் ஃபோன்சியின் பாடலான டெஸ்பாசிட்டோவிற்கு மவுஸ் மரியோனேட்டை(எலி வடிவத்தில் உள்ள பொம்மை) நடன பாணியில் கையாண்டதை ஜுவான் ஜோஸ் பிகான்(Juan Jose Picon) படம் பிடித்துள்ளார் என இடம்பெற்று இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், நாட்டு நாட்டு பாடலுக்கு ஏற்ப வெளிநாட்டில் பொம்மலாட்டத்தை நடத்தியதாக ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டில் இருந்தே அந்த வீடியோ டெஸ்பாசிட்டோ பாடலுடன் வைரலாகி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.