This article is from Sep 28, 2019

5,500 வருட பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

5,500 வருடங்கள் பழமையான சிவ லிங்கம். இதை பலரிடமும் பகிருங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

ந்தியாவில் இந்து மத கடவுள்களின் பழமையான அடையாளங்கள், சிலைகள் கிடைப்பதை அதிகம் பார்த்து இருக்கலாம். அதில் ஒன்றாக 5,500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மீம் செய்தி ஒன்று முகநூலில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

பாறைகளுக்கு நடுவே சிவலிங்கம் போன்ற கூம்பு வடிவ கல்லை வட்டமிட்டு 5,500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆன்மீகம் சார்ந்த ” தெய்வீகம் ” என்ற பெயரில் இப்படியொரு தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

பார்க்கும் பொழுதே நம்பக்கூடிய வகையில் இல்லாமல் சந்தேகத்தை தூண்டும் பதிவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். ” 5,500 வருடங்கள் பழமையான சிவலிங்கம் ” என்ற வார்த்தையை பயன்படுத்தி தேடிய பொழுது தமிழில் சிவலிங்கம் குறித்த பிற செய்திகளே கிடைத்தன. மீம் தொடர்பான செய்திகள் இல்லை.

அடுத்ததாக, ” 5000 years old siva lingam ” என்ற வார்த்தையை பயன்படுத்தி தேடிய பொழுது பரவி வரும் மீம் பதிவில் இடம்பெற்று இருக்கும் புகைப்படம் நமக்கு கிடைத்தது. ” Pinterest ” என்ற தளத்தில் பதிவான புகைப்படத்தில் ” 1940-ம் ஆண்டு ஹரப்பாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எம்.எஸ் வாட்ஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் ” என பதிவிட்டு உள்ளனர்.

மேலும் புகைப்படத்தை வைத்து தேடிய பொழுது, 2018 ஜனவரியில் வெளியான இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்திகள் நமக்கு கிடைத்தன.  ” 5000-year-old rock found in Kashmir, likely to be the oldest depiction of a supernova ” என்ற தலைப்பில் அதே புகைப்படத்துடன் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில்,

” 5000 ஆண்டுகள் பழமையான கல் ஆனது சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் burzahama என்ற பகுதியில் இருந்து ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கல்லில் இடம்பெற்று இருக்கும் அடையாளங்கள் மனித வரலாற்றில் சூப்பர்நோவா இருந்ததற்கான பழமையான ஆதாரம் ” என வெளியிட்டு உள்ளனர்.

முடிவு :

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 5,500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக பரவும் செய்தி வதந்தியே. எனினும், படத்தில் இருக்கும் கல் 5000 ஆண்டுகள் பழமையானவையே.
ஆனால், அது சிவலிங்கம் அல்ல. ஜம்மு காஷ்மீர் பகுதியில் கிடைத்த பழமையான கல் மட்டுமே. அதில், பழமையான அடையாளங்கள் இருப்பதாக செய்தியில் வெளியிட்டு உள்ளனர்.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader