This article is from Oct 06, 2018

மக்களின் வரிப் பணத்தில் வாங்கிய 108 ஆம்புலன்ஸ்கள் குப்பையாய்.

பரவிய செய்தி

மக்களின் வரிப் பணத்தில் வாங்கிய பல தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ்கள் இன்று குப்பையாக உள்ள படம்.

மதிப்பீடு

சுருக்கம்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காண்ட்ராக்ட் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளது. 108 ஆம்புலன்ஸ்களின் அதிகளவிலான பராமரிப்பு பணிகள் தடைப்பட்டதாலும், அதற்கான நிதி அளிக்காத காரணத்தினாலும் இந்நிலை உருவாகியது. இது எம்மாநிலத்தில் நடந்தது விரிவாக காண்போம்.

விளக்கம்

பயன்படாத வாகனங்கள் குப்பையாய் நிறுத்தி வைப்பது போன்று மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய 108 ஆம்புலன்ஸ்கள் ஒரு இடத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல்.

தமிழகத்திலா ?

108 ஆம்புலன்ஸ்கள் பயன்படாமல் இருக்கும் புகைப்படத்துடன் தமிழகத்தில் நிகழ்ந்த ஒன்று என மீம்கள் பதிவிடுகின்றனர்.

ஆனால், இந்த 108 ஆம்புலன்ஸ்கள் தமிழகத்தை சேர்ந்தவை இல்லை என்பதே உண்மை. அதை அறியாமல் வதந்தியை பரப்பி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசமா ?

காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் 108 ஆம்புலன்ஸ்கள் புகைப்படத்தை பதிவிட்டு உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்தது என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

திக்விஜய சிங் கூறியது போன்று இது நிகழ்ந்தது உத்தரப்பிரதேசமும் அல்ல.

எந்த மாநிலம் & ஏன் ? 

108 ஆம்புலன்ஸ்கள் குப்பை போல் காட்சியளிக்கும் புகைப்படம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தது. ஆம், ஆந்திராவின் விஜயவாடா அருகே உள்ள அவுட்டுபள்ளி என்ற பகுதியில் பயன்படாத 108 ஆம்புலன்ஸ்கள் இருப்பது பற்றிய தெலுங்கு நியூஸ் சேனல் 2017 செப்டம்பர் 22-ம் தேதி செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த 108 ஆம்புலன்ஸ் படத்தை zoom செய்து பார்க்கையில் தெலுங்கு எழுத்துக்களும், GOVERNMENT OF ANDHRA PRADESH என்றும் உள்ளன.

ஆந்திராவில் 108 ஆம்புலன்ஸ்கள் சேவைக்கான காண்ட்ராக்ட் GVK என்ற நிறுவனத்திடம் இருந்துள்ளது. 2016 செப்டம்பரில் இந்த காண்ட்ராக்ட் முடிவடைந்த நிலையில் புதிய டென்டர் அறிவிக்கப்பட்ட நிலையில், GVK நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஓராண்டு நடைபெற்ற வழக்கில் ஆளும் ஆந்திர அரசு வெற்றிப் பெற்றது.

108 ஆம்புலன்ஸ்கள் சேவை BVG India மற்றும் UK Specialist based ambulance service ஆகிய கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது. படத்தில் இருக்கும் 108 ஆம்புலன்ஸ்கள் BVG India-வால் பயன்படுத்தப்பட்டவை அல்ல. இவை பழைய காண்ட்ராக்ட் GVK-வால் பயன்படுத்தப்பட்டவை. இதில், பராமரிப்பு பணிகள் அதிகம் இருந்துள்ளன, அதன் பராமரிப்பு மற்றும் சேவைக்கான நிதியை ஆந்திரா அரசு ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை அடிப்படையாக கொண்டு குப்பை போல் காட்சியளிக்கும் 108 ஆம்புலன்ஸ்கள் தமிழகத்தை சேர்ந்தவை அல்ல என்பதை உறுதியாக கூறலாம். இவை பராமரிக்காமல், பயன்படாது என நிறுத்தி வைக்கப்பட்டவை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader