பேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா ?| உண்மை என்ன?

பரவிய செய்தி

இந்த விலங்கின் பெயர் கபர்பிஜீ. இது பூமிக்கு அடியில் புதைகுழி அல்லது புதைகின்ற குழியில் வாழ்கிறது. புதைக்கின்ற மனிதஉடல் உட்பட அனைத்து உடலையும் சாப்பிடக்கூடிய மிருகம் தான் இது. நாம் சுடுகாட்டில்தான் மனிதர்களை அடக்கம் செய்கிறோம் . அடக்கம் செய்யப்பட்ட பிறகு கொஞ்சநாளில் ஏதோ சில இரவுகளில் மனித ஓலம் கேட்பதாக சிலர் மிரண்டு அரண்டு வந்திருப்பர். அது பேய் என்பார்கள். இப்போது கனடாவில் அது பேய் அல்ல . இந்த மிருகம் தான் அது என கண்டிப்பிடித்து நிரூபித்திருக்கிறார்கள்.

மதிப்பீடு

விளக்கம்

மனிதர்களை போன்று அழக்கூடிய மிருகம் ஒன்று மண்ணிற்கு அடியில் புதைகுழியில் வாழ்ந்து வருவதாகவும், அவை எழும் ஒலியைத்தான் பேய் குரல் என நினைப்பதாகவும், அந்த மிருகத்தை கனடாவில் பிடித்து உள்ளர்கள் என்றும் ஓர் தகவலை பகிர்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் முகநூல் இன்பாக்ஸில் ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement

Facebook post | archived link 

ஃபாலோயர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பி, இந்த வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பரவி வருவதாக கூறி இருந்தார். அதே வீடியோ முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இந்த வீடியோ குறித்தும், விலங்கு குறித்தும் ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ? 

இப்படி பரப்பப்படும் வீடியோவில், அந்த விலங்கானது மனிதர்களை போல ஒலி எழுப்பவில்லை. அந்த விலங்கு வாய் திறந்த நிலையிலேயே இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் குரலை பதிவு செய்து இருக்கிறார்கள்.

Advertisement

Youtube link | archived link 

மேற்காணும் வீடியோ குறித்து ஆராய்ந்த பொழுது , 2019 ஜூன் 22-ம் தேதி benny young Africa என்ற யூட்யூப் சேனலில் அதே வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆனால், “Animal that cries like a man found in Arabian ” என அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி இருந்தனர்.

அந்த சேனலில் வெளியான வீடியோவில் கமெண்ட் செய்த ஒருவர் , அந்த விலங்கின் பெயர் ” Alligator Snapping Turtle ” என்றும், அரிதான விலங்கு அல்ல. போலியான வீடியோ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

Youtube link | archived link 

அதன் பின்னர் , Alligator Snapping Turtle குறித்து தேடிய பொழுது,அவை வட அமெரிக்காவில் நன்னீர் பகுதியில் வாழக்கூடிய உயிரினம் எனத் தெரிய வந்தது. Brave Wildernesss என்ற யூட்யூப் சேனலில் வெளியான வீடியோவில் Alligator Snapping Turtle குறித்து விவரித்து இருப்பார்கள். அந்த வீடியோவில் அந்த விலங்கு மனிதரை போன்று ஒலியை எழுப்பவில்லை. மாறாக, அந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்ட மற்றொரு வீடியோவில் அந்த விலங்கு மனிதரை போன்று அழும் குரல் இடம்பெற்று இருக்கும்.

ஆமை இனத்தைச் சேர்ந்த மற்றும் நன்னீர் பகுதிகளில் வாழக்கூடிய Alligator Snapping Turtle விலங்கை மனிதனை போன்று குரலை எழுப்பும் மற்றும் மனித உடலை உண்ணக்கூடிய அரிதான கபர்பிஜீ விலங்கு என வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, மனிதனை போன்று குரலை எழுப்பும் அரிதான விலங்கு கபர்பிஜீ என பரவும் வீடியோ முன்பாக அரேபியாவில் கண்டிபிடிக்கப்பட்டது என பரவி இருந்தது. ஆனால், அவை Alligator Snapping Turtle என நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் புரிந்து கொண்டு இருப்பீர்கள்.

Alligator Snapping Turtle மனிதர்களை போன்று அழக்கூடிய ஒலியை எழுப்புவதில்லை. அவ்வாறு பரவும் வீடியோ ஆடியோ எடிட் செய்யப்பட்டவை. மேற்காணும் வைரல் வீடியோ டிக் டாக் வீடியோவிற்காக யாராவது செய்து இருக்கக்கூடும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button