அமெரிக்காவில் 5,000 கோடி முதலீடு.. அண்ணாமலை பற்றி திமுகவினர் பரப்பும் ஜூனியர் விகடனின் எடிட் பக்கம்!

பரவிய செய்தி

பாஜக அண்ணாமலை 5000 கோடி முதலீடு பண்ண அமெரிக்க அமெரிக்க சென்றுள்ளார்.. ஆதராம் – ஜூனியர் விகடன் !

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலைக்கு 5000 கோடியை அமெரிக்காவில் முதலீடு செய்யும் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டு இருப்பதாக ஜூனியர் விகடனில் கழுகார் எக்ஸ்க்ளூசிவ் பகுதியில் வெளியாகி இருப்பதாகக் கூறி திமுகவினர் பலரும் அந்த செய்தியையும், ஜூனியர் விகடன் வார இதழின் பக்கத்தையும் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

Advertisement

Twitter link 

 

கழுகார் எக்ஸ்க்ளூசிவ் பகுதியில், ” தேசியக் கட்சி என்றாலே தமிழகத்தைப் பொறுத்தவரை கோஷ்டி மோதல் தான் என்றாகிவிட்டது. சமீபகாலங்களில் சத்தியமூர்த்தி பவன் அமைதிப்பூங்காவாக இருக்க அந்த இடத்தை கமலாலயம் பிடித்துகொண்டுவிட்டது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவின் தமிழ்நாடு விசிட்டில் ஏற்பட்ட சொதப்பல்கள் அண்ணாமலைக்கு எதிரான கோஷ்டிக்கு புது உற்சாக மூட்டியிருக்கின்றன. நாங்கள் சொன்னபோது நீங்கள் நம்பவில்லை  இப்போது புரிகிறதா என்று நட்டாவையும் சாட்சிக்கு வைத்துக்கொண்டு டெல்லி தலைமையிடம் புகார் கொடுத்திருக்கின்றனர் அதிருப்தியாளர்கள்.

Advertisement

இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் ஒரு முக்கியப் புள்ளிக்காக சுமார் 5000 கோடியை அமெரிக்காவில் முதலீடு செய்யும் அசைன்மென்ட் அண்ணாமலைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெருந்தொகையை நம்மை நம்பி ஒப்படைத்திருக்கிறார்களே என்று அண்ணாமலையும் தனக்கு நம்பிக்கையான டீமுடன் குஷியாகக் கிளம்பிவிட்டார். கடந்த ஒருவருடமாக ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு நபர்தான் வழக்கமாக வெளிநாட்டு முதலீடுகளை கவனிப்பவர். அவர் ஏன் தன்னுடைய பொறுப்பை விட்டுத்தர வேண்டும் என்று யோசித்திருந்தாலே அண்ணாமலைக்கு விஷயம் விளங்கியிருக்கும். ஆனால், கையில் பொக்கிஷம் இருக்கும் போது புலன்கள் மந்தமாகிவிடும் ” என இடம்பெற்று இருக்கிறது.

உண்மை என்ன ? 

2022 அக்டோபர் 5-ம் தேதியிட்ட ஜூனியர் விகடனின் வார இதழில், திருமாவளவன் புகைப்படம் மற்றும் கட்டுரைக்கு கீழே மிஸ்டர் கழுகு தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய புகைப்படமே வெளியாகி இருக்கிறது.

ஜூனியர் விகடனில் கழுகார் எக்ஸ்க்ளூசிவ் எனும் பிரிவில் அண்ணாமலைப் பற்றியச் செய்தி வெளியாகவில்லை. அந்த வார இதழில் வெளியான கழுகார் எக்ஸ்க்ளூசிவ் மேலே பார்க்கலாம். இதன் மூலம், வைரல் செய்யப்படும் ஜூனியர் விகடன் பக்கம் எடிட் செய்யப்பட்டது என புரிந்து கொள்ள முடிகிறது.

Twitter link| Archive link

இதேபோல், ஜூனியர் விகடனில் 9ம் தேதி வெளியான ஜூனியர் விகடனின் அட்டைப் பக்கத்தில் அண்ணாமலை கடத்திச் சென்ற 5000 கோடி யாருடைய பணம் ? என போலியாக எடிட் செய்யப்பட்ட பக்கம் ஒன்றும் பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு பாஜக அண்ணாமலை ரூ.5000 கோடியை முதலீடு செய்ய அமெரிக்க அமெரிக்க சென்றுள்ளார் என ஜூனியர் விகடனில் வெளியாகி இருப்பதாகப் பரப்பப்படும் பக்கம் எடிட் செய்யப்பட்டது. அப்படி எந்த செய்தியும் ஜூனியர் விகடனில் வெளியாகவில்லை.

மேலும், அக்டோபர் 9ம் தேதி ஜூனியர் விகடன் இதழில் அண்ணாமலை பற்றி வெளியான அட்டைப் படம் எனப் பரப்பப்படும் படமும் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button