அண்ணாமலை பெயரில் வைரலாகும் போலி ட்வீட்கள், ரசிகர் பக்க பதிவுகள் !

பரவிய செய்தி

12th fail ஆகிட்டோம்னு வருசா வருசம்தான் சில மனவலிமை குறைந்த மாணவர்கள் சாகுறாங்க. எதுக்கு 12th வச்சுருக்கீங்க? அது போலதான் NEET entrance. இந்தியா முழுவதும் தமிழ் மாணவர்களுக்கு கிடைக்ககூடிய மருத்துவ படிப்பை பெறுவதற்கான வாய்ப்பாக பாருங்கள்.

Tweet archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரான அண்ணாமலை அவர்களின் பெயரில் போலியான ட்வீட்கள், ரசிக பக்கங்கள் எனக் கூறி இயக்கப்படும் முகநூல் பக்கங்களில் அண்ணாமலை கூறியதாக போலியான பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அவர் கூறாத கருத்துக்கள் பல பகிரப்பட்டு ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்படுகிறது.

Advertisement

நீட் தேர்விற்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்து 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் மனவலிமை இல்லாமல் இறக்கிறார்கள், அதற்காக 12-ம் வகுப்பு தேர்வை மட்டும் வைத்துள்ளீர்கள் என அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டதாக போலியான ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Advertisement

Twitter link | archive link

இதுகுறித்து, அண்ணாமலை தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், செய்தியை பகிர்வதற்கு முன்பாக பக்கத்தை சரிபார்க்கவும், அது என்னுடைய கணக்கு அல்ல என பதிவிட்டு இருக்கிறார். இதேபோல், தான் கூறாத கருத்துக்கள் பல பரவுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | archive link

இதுவே தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம். அதே புகைப்படம் மற்றும் பெயரில் போலியான பக்கங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

Annamalai Bjp எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு போலியான பதிவுகளை வெளியிட்ட ட்விட்டர் பக்கம் தனது பக்கத்தின் பெயரை Annamalai Fan என மாற்றியது. அதனை Archive செய்யப்பட்ட பதிவில் காணாலாம். இருப்பினும், தற்போது அந்த பக்கத்தின் பெயரை Saffron என மாற்றி விட்டார்கள். அந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலான ட்வீட்களை ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்.

Twitter link | archive link  

Twitter link | archive link 

போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியான ட்வீட் பதிவை அண்ணாமலை பெயரில் இயங்கும் ரசிகர் பக்கத்திலும் பகிர்ந்து உள்ளார்கள். அந்த பக்கத்தையும் சிலர் உண்மையான பக்கம் என நினைத்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Facebook link | archive link 

சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்தவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயரில் போலியான சமூக வலைதள பக்கங்கள் மற்றும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன என நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். அண்ணாமலை அவர்களின் விசயத்தில் அவரின் ஆதரவாளரே போலியான பக்கத்தில் அண்ணாமலை கூறியதாக பதிவிட்டு இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களின் பின்னணியை ஆராய்ந்து பார்க்காமல் பகிர வேண்டாம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button