கருப்பு எம்ஜிஆர் என அண்ணாமலைக்கு போஸ்டர் ஒட்டினார்களா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்கும் வகையில் ” ராமாவரம் வருகை தரும் எங்கள் கருப்பு எம்ஜிஆர் ” என அதிமுக கொடியின் வண்ணத்தில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் உடன் வைரலாகி வருகிறது.


உண்மை என்ன ?

சமூக வலைதளங்களில் பரவும் படத்தில் உள்ள போஸ்டர் பகுதியை மட்டும் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மதுரையில் அதிகரித்து வரும் போஸ்டர் கலாச்சாரம் பற்றி 2021 ஜூலை 15-ம் தேதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியான போஸ்டர் புகைப்படம் கிடைத்தது.

அதில், நடிகர் ரஜினிகாந்த் உடைய அரசியல் பயணம் குறித்து அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரே இடம்பெற்று இருக்கிறது. தற்போது வைரலாகும் அண்ணாமலை போஸ்டர் அதன் மீதே இடம்பெற்று இருக்கிறது.

” ராமாவரம் வருகை தரும் எங்கள் கருப்பு எம்ஜிஆர் ” என அண்ணாமலையின் முகத்தை எம்ஜிஆர் படத்துடன் வைத்து ஒரு போலியான போஸ்டரை உருவாக்கி சுவற்றில் ஒட்டப்பட்டது போல் தவறாக பரப்பி இருக்கிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ” ராமாவரம் வருகை தரும் எங்கள் கருப்பு எம்ஜிஆர் ” என போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button