அண்ணாமலை மற்றும் பாஜகவினரிடம் துரை வைகோ வருத்தம் தெரிவித்தாரா ?

பரவிய செய்தி
அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு மனமார வருத்தம் தெரிவிக்கிறேன். பாஜக தொண்டர்களிடமும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் – துரை வைகோ
மதிப்பீடு
விளக்கம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதிமுகவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ அண்ணாமலை பற்றி விமர்சித்து பேசியதற்கு பாஜக தரப்பில் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என துரை வைகோ கூறியதாக IBC தமிழ் உடைய நியூஸ் கார்டு பரவி வருகிறது.
உண்மை என்ன?
துரை வைகோ பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வருத்தம் தெரிவித்ததாக ஏப்ரல் 6-ம் தேதி எந்த செய்தியும் IBC தமிழ் பக்கத்தில் வெளியாகவில்லை.
பிரதமர் மோடி குறித்து வெளியான நியூஸ் கார்டில் துரை வைகோ பற்றி போலி செய்தியை எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்.
முடிவு:
நம் தேடலில், அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு மனமார வருத்தம் தெரிவிக்கிறேன். பாஜக தொண்டர்களிடமும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என துரை வைகோ கூறியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.