சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழர்கள் பற்றி அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
சுதந்திரத்திற்கு போராடிய தமிழர்களை விட வட இந்தியர்களைத்தான் உலகம் அறியும். வட இந்தியர்களின் தியாகத்தை தமிழர்கள் போற்றி வணங்க வேண்டும் – அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழர்களை விட வட இந்தியர்களைத்தான் உலகம் அறியும் என்றும், வட இந்தியர்களின் தியாகத்தை தமிழர்கள் போற்றி வணங்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பிபிசி தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பிபிசி தமிழ் சேனலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை அளித்த பேட்டிக் குறித்து தேடுகையில், ” தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமரின் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார் ” என அண்ணாலை கூறியதாக ஜனவரி 17-ம் தேதி நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது.
பிபிசி வெளியிட்ட மேற்காணும் நியூஸ் கார்டில் போலியான கருத்தை எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள். இதேபோல், குழந்தைகளின் ரியாலிட்டி ஷோ தொடர்பாக அண்ணாமலை கூறியதாக பல போலியான எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டன.
மேலும் படிக்க : குழந்தைகளின் ரியாலிட்டி ஷோ விவகாரத்தில் அண்ணாமலை பற்றிப் பரவும் போலிச் செய்திகள் !
முடிவு :
நம் தேடலில், சுதந்திரத்திற்கு போராடிய தமிழர்களை விட வட இந்தியர்களைத்தான் உலகம் அறியும், வட இந்தியர்களின் தியாகத்தை தமிழர்கள் போற்றி வணங்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.