கர்நாடகாவில் அண்ணாமலை பிரச்சாரம் செய்த பூத்தில் 10 ஓட்டு மட்டும் விழுந்ததாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

பரவிய செய்தி
கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த உத்தரகன்னடா மாவட்டம் கிட்டூர் தொகுதியின் ஒரு பூத்தில் பாஜகவிற்கு வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்கான ஓட்டுப்பதிவு கடந்த மே 10-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இதில் பா.ஜ.க தரப்பில் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும், தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இதில் அண்ணாமலை ஏற்கனவே கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய நிலையில், அங்கு தமிழர்கள் அதிகம் உள்ள தொகுகளில் பிரச்சாரம் செய்ய அண்ணாமலை நியமிக்கப்பபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு அங்கு மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெங்களூரு 28, உத்தர கன்னடா 6, தாவணகெரே 7, ஷிவமொகா 7, உடுப்பி 5, சிக்கமகளூரு 5, கோலார் 6, மாண்டியா 7, ஹாசன் 7, தட்சிண கன்னடா 8 ஆகிய 10 மாவட்டங்களின் 86 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், அண்ணாமலை பிரச்சாரம் செய்த உத்தரகன்னடா மாவட்டம் கிட்டூர் தொகுதியின் ஒரு பூத்தில் பாஜகவிற்கு வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ளதாக கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இன்றைய பழமொழி:
உள்ளூரில் விலை போகாத மாடு
வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம்(Pun unintended) pic.twitter.com/acd1JwRhVo
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) May 13, 2023
டேய் பொறுக்கிப் பயல் @annamalai_k , இங்க வாடா😂😂😂😂
பத்து ஓட்டு ஆட்டுப்புழுக்க அயோக்கியப்பயல்😂😂😂 pic.twitter.com/LNcqIruQQ6
— Surya Born To Win (@Surya_BornToWin) May 13, 2023
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு தொடர்பாக நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் அதிகாரப்பூர்வமான வலைதள பக்கங்களில் தேடியதில் அப்படி எந்த செய்தியும் அவர்கள் பக்கத்தில் வெளியிடப்படவில்லை.
மேலும் நியூஸ் கார்டில் உள்ள படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே படத்துடன் கடந்த மே 12 அன்று நியூஸ் 7 தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ஆர்.எஸ்.பாரதிக்கு சவால் விடுக்கிறேன்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளதை காண முடிந்தது.
”ஆர்.எஸ்.பாரதிக்கு சவால் விடுக்கிறேன்”#Chennai | #DMK | #BJP | #MKStalin | #Annamalai |@CMOTamilnadu|@annamalai_k | #PTRPalanivelthiyagarajan | #TRBalu | #Nasar | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/APFdzNVd3r
— News7 Tamil (@news7tamil) May 12, 2023
இதன்மூலம் “ஆர்.எஸ்.பாரதிக்கு சவால் விடுக்கிறேன்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய நியூஸ் கார்டை, ‘அண்ணாமலைக்கு வெறும் 10 ஓட்டு’ என்று எடிட் செய்தி நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாக கூறி நியூஸ் கார்டை பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
கர்நாடகா கிட்டூர் தொகுதியில் 16வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் 53,976 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். 58,813 வாக்குகளுடன் முதல் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் உள்ளார்.
முடிவு:
நம் தேடலில், ‘அண்ணாமலைக்கு வெறும் 10 ஓட்டு’ எனப் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது. இது தொடர்பாக அவர்கள் எந்தவித செய்தியோ, நியூஸ் கார்டோ வெளியிடவில்லை என்பது தெளிவாகிறது.