KGF தங்கம், அண்ணாமலை பற்றிய நையாண்டிக் கார்டை உண்மை என நினைத்துக் கருத்துப் பகிரும் பாஜகவினர் !

பரவிய செய்தி
தலைவர் அண்ணாமலை அண்ணா திமுக மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டை மறைக்க திமுக குடும்ப ஊடகங்கள் பரப்பும் பொய் செய்திகள் இதுபோன்று உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
“KGF தங்கம் – ராக்கி பாய்க்கும், அண்ணாமலைக்கும் தொடர்பு? KGF – இல் உள்ள தங்கத்தை கர்நாடகத்தில் வைத்து பணமாக மாற்றி ராக்கி பாய் மற்றும் பத்து தல STR இன் உதவியுடன் ஹெலிகாப்டரில் கொண்டு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை.” என்று குறிப்பிடப்பட்ட நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள் சிலரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
https://twitter.com/Its_Muthu_Rss/status/1648283537554939913
இக்கார்டை பகிர்ந்த பாஜகவின் அலிஷா அப்துல்லா, “தலைவர் அண்ணாமலை அண்ணா திமுக மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டை மறைக்க திமுக குடும்ப ஊடகங்கள் பரப்பும் பொய் செய்திகள் இதுபோன்று உள்ளது” எனக் கூறியுள்ளார்.
உண்மை என்ன?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போதைய திமுக ஆட்சி மற்றும் முந்தைய ஆட்சியில் (2006-2011) திமுக அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களை வெளியிடுவேன் என்று கூறி, திமுக தலைவர்களுக்கு 1.34 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாக பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியல் அடங்கிய தொகுப்பு திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 14 அன்று அண்ணாமலையால் வெளியிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் 15 நாட்களில் ஆதாரங்களை தாக்கல் செய்யத் தவறினால் அவர் மீது நீதிமன்றத்தில் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலையிடம் விளக்கம் கேட்டு வழக்கறிஞர் நோட்டீசும் அனுப்பினார். இது தொடர்பாக DMK IT WING வெளியிட்டுள்ள அறிக்கையைக் கீழே காணலாம்.
திமுகழகத்தின் மீதும், கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் திரு. கு.அண்ணாமலை அவர்களுக்கு
1/4 pic.twitter.com/Dq9FpzaPak
— DMK IT WING (@DMKITwing) April 16, 2023
இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, தன் மீது தவறாக சுமத்தப்பட்ட ஆருத்ரா மோசடி விவகாரத்திற்காக திமுக தனக்கு 500 கோடியும், ஒரு ரூபாயும் தர வேண்டும் என்றும், சட்ட நடவடிக்கைக்கு நான் தயார் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்! pic.twitter.com/T1ZHNyA9Qd
— K.Annamalai (@annamalai_k) April 17, 2023
இவ்வாறு திமுகவினர் மற்றும் பாஜகவினரிடையே தொடர் விமர்சனங்கள் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நிலையில், கர்நாடகா தேர்தலுக்காக அங்கே சென்ற அண்ணாமலை பயன்படுத்திய ஹெலிகாப்டரில் வாக்காளர்களுக்கு பணம் கொண்டு சென்றதாக காங்கிரஸ் வேட்பாளர் குற்றம்சாட்டினார். இதற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்தும் இருந்தார்.
இந்நிலையில், KGF ராக்கி பாய்க்கும், அண்ணாமலைக்கும் தொடர்பு? என சன் நியூஸ் கார்டை Bun News என எடிட் செய்து நையாண்டியாக சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி உள்ளனர். மேலும் இதில் அண்ணாமலையை நடிகர் சிம்புவுடனும் தொடர்புபடுத்தி இருக்கிறார்கள்.
இந்த நியூஸ் கார்டு போலியானது, சன் நியூஸ் வெளியிடவில்லை. நையாண்டியான இந்த நியூஸ்கார்டை உண்மை என நம்பி பாஜக ஆதரவாளர்கள் சிலர் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இதற்கு தீவிரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : இன்பநிதி அரசியல் : நையாண்டியான போலி ட்வீட்டை உண்மை என நினைத்து பரப்பும் அதிமுக, பாஜகவினர் !
மேலும் படிக்க : உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் எனப் பரப்பப்படும் இத்தாலி இரயிலின் புகைப்படம் !
இதற்கு முன்பாக, நையாண்டிப் பதிவுகளை உண்மை என நினைத்து பாஜகவினர் பரப்பியது குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், KGF ராக்கி பாய்க்கும், அண்ணாமலைக்கும் தொடர்பு என்ற நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது. இது ஒரு நையாண்டிப் பதிவு என்பதை அறியாமலேயே அலிஷா அப்துல்லா உள்பட பாஜக ஆதரவளார்கள் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர் என்று அறிய முடிகிறது.