Fact Checkஅரசியல்தமிழ்நாடு

மோடி இருக்கிறார் சுட்டுத் தள்ளுங்கள்: எடிட் செய்து பரப்பப்படும் அண்ணாமலை பேசிய வீடியோ !

பரவிய செய்தி

‘ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்’ என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா?

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேடையில் பேசும் போது, ” உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கி உள்ளே குண்டு இருக்கு, ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்கள் சுட்டு தள்ளிட்டு வந்துட்டே இருங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திலே பார்த்துக் கொள்ளும் ” எனப் பேசும் 1௦ நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

பிப்ரவரி 26ம் தேதி அண்ணாமலை பேசும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த எம்.பி தொல்.திருமாவளவன், ” ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்’ என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா?

மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா? தமிழ்நாடு முதல்வர், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ” எனப் பதிவிட்டு இருக்கிறார். 

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், கிருஷ்ணகிரியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய  உரையின் முழு வீடியோ nba 24×7 எனும் யூடியூப் சேனலில் பதிவாகி இருக்கிறது.

இராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அண்ணாமலை 10.40வது நிமிடத்தில், ” பார்டரில்(எல்லையில்) இருக்கக்கூடிய ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் கூட இங்கிருந்து உரக்கமாக ஒரு செய்தியை சொல்லிக் கொள்கிறோம். அரசு உங்களுடன் இல்லை என்றாலும், நாங்கள் உங்களுடன் இருப்போம் என்ற செய்தியை சொல்கிறோம். உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கி உள்ளே குண்டு இருக்கு, ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்கள் சுட்டு தள்ளிட்டு வந்துட்டே இருங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திலே பார்த்துக் கொள்ளும். எதை பற்றியும் பயப்படாமல் பார்டரில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரரும் கூட இந்திய ஆர்மி பேட்ஜை போட்டுக் கொண்டு சொல்வீர்கள் ” எனப் பேசியுள்ளார்.

ராணுவ வீரர் மரணம் – பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் ” எனும் தலைப்பில் தந்திடிவி சேனலில் முழு நேரலை பதிவாகி இருக்கிறது. போராட்டத்தின் இறுதியில் அண்ணாமலை பேசிய பகுதி இடம்பெற்று இருக்கிறது. அதிலும், அண்ணாமலை எல்லையில் உள்ள தமிழ்நாட்டு இராணுவ வீரர்கள் பற்றி பேசியதே இடம்பெற்று இருக்கிறது.

மேலும் படிக்க : “குண்டு வைப்போம்” என தமிழ்நாடு அரசை மிரட்டும் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் !

இதே மேடையில் குண்டு வைப்போம் என தமிழ்நாடு அரசை மிரட்டும் வகையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் பேசி இருந்தார். அதுகுறித்தும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : அண்ணாமலையை தன்பால் ஈர்ப்பாளராக சித்தரித்து விகடன் பெயரில் பரப்பப்படும் போலிச் செய்தி !

மேலும் படிக்க : அமெரிக்காவில் 5,000 கோடி முதலீடு.. அண்ணாமலை பற்றி திமுகவினர் பரப்பும் ஜூனியர் விகடனின் எடிட் பக்கம்!

இதற்கு முன்பாக, அண்ணாமலை பற்றி பரப்பப்பட்ட தவறான மற்றும் போலிச் செய்திகள் குறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், பாஜக தலைவர் அண்ணாமலை வன்முறையை தூண்டும் விதத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுங்கள் எனப் பேசியதாகப் பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் எல்லையில் பணியாற்றும் போது சுட்டுத் தள்ளுங்கள் எனப் பேசியதை தவறாக எடிட் செய்து பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button