பாஜக யாத்திரையில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்காக 200கி பீப் பிரியாணி தயாரானதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
தமிழக பாஜக தலைவர் மேற்கொள்ளும் பாதயாத்திரையின் துவக்கவிழாவில் கலந்துகொள்ளும் கோவா மற்றும் கேரள நிர்வாகிகளுக்காக பிரத்யேகமாக தயாராகும் 200 கிலோ “பீஃப் பிரியாணி”. கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல் கலைஞர்களைக் கொண்டு தயாராகிறது
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் பாத யாத்திரையின் துவங்க விழா நிகழ்ச்சி ஜூலை 28ம் தேதி இராமேஸ்வரத்தில் நடத்தப்பட்டது. இதற்காக கோவா மற்றும் கேரளாவில் இருந்து வந்த பாஜக நிர்வாகிகளுக்காக 200கி பீப் பிரியாணி தயாரானதாக தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பாஜகவின் யாத்திரை குறித்து வெளியான செய்திகள் தொடர்பாக தந்தி டிவி சேனலில் தேடுகையில், பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு உணவு தயாரிப்பு பணி மும்முரம் என ஜூலை 28ம் தேதி செய்தி வெளியாகி இருக்கிறது.
#JUSTIN || தமிழக பாஜக சார்பில் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ இன்று மாலை துவக்கம்
ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விழா மேடையை பார்வையிட்டார் அண்ணாமலை
அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழாவில் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை… pic.twitter.com/hAcoplpg7U
— Thanthi TV (@ThanthiTV) July 28, 2023
தந்தி டிவி வெளியிட்ட செய்தியில், ” தமிழக பாஜக சார்பில் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ இன்று மாலை துவக்கம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விழா மேடையை பார்வையிட்டார் அண்ணாமலை. அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழாவில் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை ” என்றே உள்ளது.
மேற்காணும் செய்தியில், 200 கிலோ பீப் பிரியாணி தயார் செய்ததாக போலியான செய்தியையும், படங்களையும் வைத்து எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தின் படுக்கை வசதி எனப் பரவும் தவறான புகைப்படம் !
மேலும் படிக்க : இராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டா திருடும் பாஜகவினர் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட செய்தி !
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு பாஜக தலைவர் மேற்கொள்ளும் பாதயாத்திரையின் துவக்கவிழாவில் கலந்துகொள்ளும் கோவா மற்றும் கேரள நிர்வாகிகளுக்காக 200 கிலோ பீப் பிரியாணி தயார் செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி போலியானது என்பதை அறிய முடிகிறது.