இராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டா திருடும் பாஜகவினர் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட செய்தி !

பரவிய செய்தி
ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்க்களை திருடி செல்லும் பாஜக தொண்டர்கள்
மதிப்பீடு
விளக்கம்
மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்னும் தலைப்பின் கீழ் இன்று முதல் தனது பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ளார்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை திருடிய பாஜக தொண்டர்கள் என்று கூறிய ஜெயா டிவியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் திமுகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த நியூஸ் கார்டில் ஒரு நபர் கடையில் உள்ள பிரியாணி அண்டாக்களை தன்னுடைய பைக்கில் எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சியின் புகைப்படங்களை காண முடிந்தது.
என்ன கருமாந்திரம்டா பொறுக்கிப் பயலே 🐐@annamalai_k ?🤦♂️
இருட்டு வீட்டுக்கு போனாலும் திருட்டு கை நிக்காதுன்னு ஒரு சொலவடை உண்டு அதேபோல இந்த பாஜககாரனுங்க எங்க போனாலும் இந்த திருட்டு கொலை, கொள்ளை ரௌடித்தனம்,பாலியல் பலாத்காரம் விடியோ ஆடியோ இல்லாமல் இருக்காது போல
#என்வீடியோ_என்ஆடியோ pic.twitter.com/JI3G2ciD42
— shanmugamchinnaraj (@shanmugamchin10) July 28, 2023
என்ன கருமாந்திரம்டா பொறுக்கிப் பயலே 🐐@annamalai_k ??? 😂😂😂🤦♂️🤦♂️🤦♂️
இருட்டு வீட்டுக்கு போனாலும் திருட்டு கை நிக்காதுன்னு ஒரு சொலவடை உண்டு.. அதேபோல இந்த பாஜககாரனுங்க எங்க போனாலும் இந்த திருட்டு, கொலை, கொள்ளை, ரௌடித்தனம், பாலியல் பலாத்காரம் விடியோ ஆடியோ இல்லாமல் இருக்காது போல.. pic.twitter.com/1bxck2JktV
— நேசம் ஹாஜா I•N•D•I•A (@hajangr) July 28, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ஜெயாடிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், சமீபத்தில் இந்த நியூஸ் கார்டை அவர்கள் வெளியிடவில்லை என்பது உறுதியானது.
மேலும் பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடிய போது, இந்த புகைப்படத்தில் உள்ள காட்சிகளை, ஜெயா பிளஸ் கடந்த 2022 மே 20 அன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் காண முடிந்தது.
அந்த வீடியோவானது “பிரியாணி அண்டாக்களை திருடி சென்ற மர்ம நபர்கள் | மரக்காணம் | பிரியாணி திருட்டு” என்ற தலைப்பின் கீழ் ஜெயா பிளஸ் யூடியூப் சேனலில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதில் “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள பாத்திரக்கடையில் பிரியாணி அண்டாக்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் போனில் பேசிக்கொண்டே கடையில் ஆள் இல்லாததை கவனித்த இரண்டு மர்மநபர்கள் கடையின் பாத்திரங்களை பைக்கில் திருடி சென்றுள்ளதைக் காண முடிந்ததால், கடையின் உரிமையாளர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், சமயம் தமிழ் இணையதளத்திலும் அதே புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருக்கிறது. பிரியாணி அண்டாக்களை திருடியவர்கள் யார் என செய்திகளில் குறிப்பிடவில்லை.
மேலும் படிக்க: குஜராத் அரசு வரி வருவாயை அதிகரிக்க மதுவிலக்கு சட்டத்தை நீக்க முடிவு எனப் பரவும் போலிச் செய்தி !
மேலும் படிக்க: சந்திரயான்-3 திட்டத்திற்காகப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், இராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை திருடும் பாஜகவினர் எனப் பரவிவரும் ஜெயாடிவியின் நியூஸ் கார்டு போலியானது என்பதையும், இவை கடந்த 2022-இன் போது மரக்காணத்தில் மர்மநபர்கள் பிரியாணி அண்டாவை திருடிய போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்கள் என்பதையும் அறிய முடிகிறது.