ஜெர்மனி நெடுஞ்சாலையின் குறைந்தபட்ச வேகம் குறித்து அண்ணாமலை சொன்ன தவறான தகவல்!

பரவிய செய்தி

ஜெர்மனியில் Munich to Berlin நகரங்களுக்கு இடையே A6 நெடுஞ்சாலையில் (12 Lanes)  குறைந்தபட்ச வேகமே 240 km/h. அதற்குக் குறைவான வேகத்தில் நீங்கள் போகக் கூடாது. நாங்கள் 260km/h வேகத்தில் சென்றோம். 600கி.மீ தூரத்தை 2.20 மணி நேரத்தில் பயணித்தோம். – அண்ணாமலை

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2020, ஆகஸ்ட் மாதம் ‘கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை’ நிகழ்ச்சி ஒன்றில் ஜெர்மனி உள்ள நெடுஞ்சாலையின் குறைந்த பட்ச வேகம் குறித்துப் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.  

அண்ணாமலை பேசியது, “ஜெர்மனியில் Munich, Berlin என இரண்டு நகரங்கள் உள்ளது. அதாவது ஜெர்மனியில் மிகப்பெரிய பொருளாதார நகரம். அங்கு A6  என ஒரு நெடுஞ்சாலை உள்ளது. மொத்தம் 12 lane. 6 lane இந்தப்பக்கம், 6 lane அந்தப்பக்கம். அதில் குறைந்த பட்ச வேகம் 240 Km/hr. நீங்கள் 240 Km கீழே போகக் கூடாது. நீங்கள் இந்தியாவில் இருந்து போகிறீர்கள். கார் அல்லது Taxi எடுத்துக் கொள்கிறீர்கள். நமது இந்தியாவில் 100 Km-க்கு மேல் சென்றால் கார் ஆடுமே, பயமா இருக்கும். விபத்து ஆகிவிட்டால் என்ன செய்வது. Break பிடிக்குமா? ஏன் என்றால் நம்ப ஊர் Culture-ல் நாம் வளர்ந்தவர்கள். அங்கே நாங்கள் ஒரு வாடகை கார் எடுத்துச் செல்லும்போது Driver சொன்னது. என்ன சார் மெதுவாகச் செல்கிறீர்கள். அழுத்துங்க சார், அழுத்துங்க சார். 180, 220, 240, 260 தொடுகிறோம் அந்த நெடுஞ்சாலையில். கிட்டத் தட்ட 600 Km தூரத்தை 2 மணி நேரம் 20 நிமிடத்தில் கவர் செய்கிறோம். அப்போதுதான் தெரிந்தது. ஒரு வளர்ந்த நாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று”.

உண்மை என்ன?

அண்ணாமலை சொன்னது போல் ஜெர்மனியில் Munich to Berlin இடையிலான சாலையின் பெயர் A6 கிடையாது A9. மேலும் அந்த நெடுஞ்சாலை 12 Lane (பாதை) கொண்டது அல்ல. ஒரு பக்கம் 3 பாதை என்கிற வீதத்தில் இரண்டு பக்கமும் சேர்த்து 6 பாதைகளை மட்டுமே கொண்டது. கூடுதலாக இரண்டு பக்கமும் தலா ஒரு அவசர பாதையும் (Emergency lane) உள்ளது. 

Google Map link

ஜெர்மனியில் 13,000 கி.மீ தொலைவிற்கு அமைந்துள்ள Autobahn நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக எத்தனை கி.மீ வேகத்தில் வேண்டுமானாலும் செல்லலாம். வேகக் கட்டுப்பாடு என்பது கிடையாது (No Speed limit). ஆனால், அரசு பரிந்துரைத்த அதிகபட்ச வேகம் என்பது 130 கி.மீ. அதாவது, இந்த சாலையில் 130 கி.மீ வேகத்தில் பயணம் செய்தல் பாதுகாப்பானது என அந்நாட்டு அரசு பரிந்துரைக்கிறது. 

இச்சாலையில் செல்வதற்கு எனக் குறைந்த பட்ச வேகமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆறு வழிச்சாலையில் குறைந்த பட்ச வேகக் கட்டுப்பாடுகள்

    • Fast lane –  110 km/h
    • Middle lane – 90 km/h
    • Slow lane – 60 km/h

அண்ணாமலை சொல்வது போல் 240 கி.மீ குறைந்த பட்ச வேகம் கிடையாது. 

2017-2022 தரவின்படி, Autobahn நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் சராசரி வேகம் 142 km/h.

மேலும் இந்த சாலையில் பயணித்த அனுபவம் குறித்து ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர் அளித்த தகவல், “Munich to Berlin-க்கு (529 கி.மீ) A9 நெடுஞ்சாலையில் சராசரியாக 120 கி.மீ வேகத்தில் பயணித்து 7 மணி நேரத்தில் சென்றடைந்தோம். காரில் 200 கி.மீ வேகத்திலும் செல்ல முடியும். ஆனால், நெடுஞ்சாலை முழுவதும் அதே வேகத்தில் செல்வது கடினம், எனத் தெரிவித்து இருந்தார்.

Autobahn நெடுஞ்சாலையில் அதிவேக கட்டுப்பாடு இல்லாததால் 200 km/hr வேகத்திற்கு மேல் காரில் பயணித்த வீடியோக்களும் இணையத்தில் உள்ளன. 

ஆனால், அண்ணாமலை குறைந்தபட்ச வேகம் 240 km/hr என்றும் A9 என்பதற்குப் பதிலாக A6 என்றும் தவறான தகவல்களை பேசியுள்ளார். மேலும் அவர், Munich to Berlin-க்கு 260 km/hr வேகத்தில் 2.20 மணி நேரத்தில் சென்றதாக மிகைப்படுத்தியும் பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. 

முடிவு: 

ஜெர்மனியில் Munich to Berlin நகரங்களுக்கு இடையே A6 நெடுஞ்சாலையில் (12 Lanes)  குறைந்தபட்ச வேகமே 240 km/h, அதற்குக் குறைவான வேகத்தில் நீங்கள் போகக் கூடாது என அண்ணாமலை சொன்ன தகவல்கள் தவறானவை. 

Munich to Berlin நெடுஞ்சாலையின் பெயர் A9. அது 6 Lane சாலை. மேலும் அச்சாலையின் செல்வதற்கான குறைந்தபட்ச வேகம் 60 – 110 Km.   

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader