பறவைகளின் எச்சத்தால் கார்கள் பாழாகிறது என மரத்தில் ஆணிகளை பொருத்தியுள்ளனர் | எங்கே ?

பரவிய செய்தி

விலையுயர்ந்த கார்களில் பறவைகளின் எச்சம் விழுவதால், அதனை தடுக்க மரங்களில் பறவைகள் அமராதவாறு ஆணிகளை சிலர் வைத்துள்ளனர். மனிதர்கள் எத்தகைய கொடூரமான நிலைக்கும் செல்கிறான்.

 

மதிப்பீடு

விளக்கம்

செல்வம் படைத்தவர்கள் தங்களின் சொகுசு கார்களை பறவைகளின் எச்சங்களில் இருந்து பாதுகாக்க அவற்றின் வசிப்பிடமான மரத்தில் ஆணிகளை வைத்து இருக்கின்றன. அதிக அளவில் ஆணிகள் படர்ந்து இருக்கும் மரமானது எங்கு உள்ளது என்பது குறித்த தேடுதலில் அது தொடர்பான சில செய்திகளை பார்க்க முடிந்தது.

Advertisement

இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டோல் பகுதியில் வசிக்கும் சில செல்வந்தர்கள் தங்களின் BMW மற்றும் Audi உள்ளிட்ட விலையுர்ந்த சொகுசுக் கார்களை பறவைகளின் எச்சங்களில் இருந்து பாதுகாக்க அருகில் இருக்கும் மரங்களில் Anti bird spikes எனும் ஆணிகளை பறவைகள் அமர முடியாதவாறு பொருத்தி உள்ளனர்.

அங்கிருக்கும் பகுதியில் புறாக்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், மரங்களில் வந்து அமரும் பறவைகள் எச்சங்களை வெளியிடும் பொழுது கார்கள் பாழாகிறது. பறவைகளை அச்சுறுத்தி அங்கு வரவிடாமல் செய்ய மர பறவை பொம்மைகள் என பல முயற்சிகளை மேற்கொண்டு பயனில்லை. ஆனால், இந்த ஆணிகள் பறவைகளிடம் இருந்து மரங்களுக்கு கீழே இருக்கும் கார்களை பாதுகாக்கும் என அங்கு வசிக்கும் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

க்ரீன் பார்ட்டி கவுன்சிலர் Paula O’ Rourke, தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் மரத்தில் நிலத்திற்கான சொந்தக்காரர் இப்படி செய்வதாக தெரிவித்து இருந்தார். ஆகையால், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

Advertisement

பறவைகள் அதிக அளவில் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு வருவதால் மர பொம்மைகள் உள்ளிட்ட முறையில் பறவைகளை பயமுறுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அதில் பயனில்லை என்பதால் மரங்களில் ஆணிகளை பொருத்தி உள்ளனர். பிரிஸ்டோல் நகரில் உள்ள இரண்டு மரங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளின் ஜன்னல் விளிம்புகள் உள்ளிட்டவைகளிலும் ஆணிகள் பொருத்தப்பட்டு உள்ளன.


எழுத்தாளரும் மற்றும் பறவைகள் மீதான அன்பு கொண்டவரான Jennifer Garrett, இதனை வனத்தின் மீதான நம் போர் என ட்விட்டரில் விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.

மரங்களில் ஆணிகளை பொருத்தி இருப்பது தொடர்பாக 2017-ல் செய்திகள் மட்டுமின்றி, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது. பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button