This article is from Aug 02, 2018

ஆப்பிள் விதையை சாப்பிட்டா சாவு..!

பரவிய செய்தி

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த கொலை சம்பவத்தில் இந்தியப் பெண் தன் கணவருக்கு ஆப்பிள் விதைகளை பொடியாக்கி கொடுத்து கொன்றுள்ளார். இந்த வழக்கில் கைதாகிய பெண் மற்றும் அவரது காதலருக்கு 22 மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டணை அளிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் விதைகள் பற்றி தகவல் தேடுகையில் அதில் சயனைடு இருப்பது தெரியவந்துள்ளது. நாம் உடலுக்கு நல்லது என்று உண்ணும் ஆப்பிள் விதையில் உடனடியாக உயிரைப் பறிக்கும் சயனைடு கலவை உள்ளது என்ற தகவல் பலரும் அறியாமல் உள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

ஆப்பிள் விதைகளில் சயனைடு கலவை இயற்கையாகவே இருப்பது உண்மையானதாக இருப்பினும் ஆப்பிள் பழத்தை உண்பதால் உடலுக்கு தீங்கு ஏதுமில்லை. ஆப்பிள் உள்ளிட்ட பல பழங்களின் விதைகளில் சயனைடு கலவை இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால், ஆஸ்திரேலியாவில் நடந்த கொலையில் நேரடியாகவே சயனைடு கலந்து கொடுத்து கொன்றுள்ளார் அவரது மனைவி.

விளக்கம்

பழங்களில் மிகவும் பிரபலமான ஒன்றான ஆப்பிளின் விதையில் சயனைடு கலவை இயற்கையாகவே இருப்பதாக எச்சரிக்கை தகவல் பரவி வருவதை பலரும் அறிந்து இருப்போம். ஆப்பிள் விதைகள் இயற்கையாகவே amygdalinஎன்ற வேதிப்பொருள் கலவையை கொண்டுள்ளது. இவற்றின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு பிறகு சயனைடு மற்றும் இனிப்பு கலவை தாழ்ந்து ஹைட்ரஜன் சயனைடு ஆக மாறுகிறது.

amygdalin புற்றுநோயைக் குணப்படுத்த பயன்படுவதாக பொய்யாக தகவல் பரப்பப்படுகிறது. இது இயற்கையாகவே பல பழங்கள், தாவரங்கள் உள்ளிட்டவற்றில் காணப்படுகிறது. சயனைடு உடனடியாக உயிரைப் பறிக்கும் விஷ மருந்துகளில் முதன்மையானதாக இருந்து வருகிறது.

சாதாரணமாக சயனைடு மற்ற வேதிப்பொருள்கள் உடன் கலவையாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஹைட்ரஜன் சயனைடு, சைனோஜென் குளோரைட், சோடியம் சயனைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவை. ஆப்பிள் விதைகளில் உள்ள சயனைடு கலவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பது உண்மையே. ஆப்பிள் மட்டுமின்றி செர்ரி உள்ளிட்ட பல பழங்களின் விதையிலும் சயனைடு கலவை இயற்கையாகவே உள்ளன. ஆனால், அவற்றை விற்கும் நிறுவனங்கள் அவற்றை பற்றி எந்தவொரு முன்னெச்சரிக்கை அறிவிப்பையும் குறிப்பிடவில்லை.

ஆஸ்திரேலியா கொலை சம்பவம் : 

 சாம் ஆப்ரகாம் என்பவரை கொன்ற குற்றத்திற்காக அவரது மனைவியும், இந்திய பெண்ணான சோபியா மற்றும் சோபியாவின் காதலர் அருண் கமலாசனன் ஆகியோர் குற்றவாளிகள் என மெல்போர்ன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சோபியா மற்றும் அருண் கமலாசனன் இருவரும் இணைந்து சாம்-ஐ கொலை செய்வதற்காக அவர் அருந்திய ஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கொன்றுள்ளனர்.

2015 அக்டோபர் -ல் சாம் தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் நெஞ்சுவலியில் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், பிரேதப்பரிசோதனை முடிவில் சயனைடு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் நீண்ட நாள் விசாரனைக்கு பிறகு 2016 ஆகஸ்டில் சோபியா மற்றும் அருண் கமலாசனன் கைது செய்யப்பட்டனர்.  சோபியாவிற்கு 22 முதல் குறைந்தது 18 ஆண்டுகள் வரை சிறையும், மூன்று ஆண்டுகளாக திட்டம் தீட்டி சாம் அருந்திய ஜூசில் சயனைடு கலந்து கொடுத்த குற்றத்திற்காக 27 முதல் குறைந்தது 23 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது.

” சாம் கொலை வழக்கில் நேரடியாவே ஜூசில் சயனைடு கலந்து கொடுத்துள்ளனர். ஆனால், ஆப்பிள் விதைகளை கலந்து கொடுத்ததாக கூறுவது முற்றிலும் தவறு ” 

28 வயதான மத்யூவ் கிரிமி என்பவர் செர்ரி பழங்களை உண்ணும் பொழுது அவற்றில் இருந்த ஸ்டோன் எனும் கொட்டை போன்ற ஒன்றை கடிக்கும் பொழுது உள்ளே இருந்த கடலை போன்ற ஒன்றை சாப்பிட்டுள்ளார். உண்பதற்கு சுவையுடன் இருந்ததால் மேலும் 2 அல்லது  3 விரும்பி உண்ண பிறகு உடலில் அசாதாரண மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், உரிய நேரத்திற்கு மருத்துவமனை சென்றதால் உயிர் தப்பினார்.

செர்ரி ஸ்டோன் இயற்கையாகவே amygdalin-ஐ கொண்டுள்ளது. ஆனால், இதைப் பற்றி அப்பழம் விற்ற நிறுவனம் எந்தவொரு எச்சரிக்கையையும் செய்யவில்லை. சயனைடு உண்ட பின், வயிற்று பிடிப்பு, தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இதயம் செயல் இழந்து மரணம் ஏற்படும்.

 amygdalin அளவை பொருத்து உடலுக்கு ஆபத்து நேரிடுகிறது. உடலுக்கு ஆபத்தான அளவானது 1.5mg/kg. ஒரு ஆப்பிளில் 3mg/g amygdalin உள்ளது. ஒரு விதையில் தோராயமாக 0.7g உள்ளது “.

” சிவப்பு செர்ரி விதையில் 3.9 mg/g , வாதுமை பழம் விதையில் 14.4mg/g , greengage பலவகையில் அதிகபட்சமாக 17.5 mg/g amygdalin உள்ளன ”

சயனைடு உட்கொண்டால் உடனடி மரணம் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், மரணமானது அதன் வீரியத்தை பொறுத்து உள்ளது. ஆப்பிள் விதைகளை உண்பதால் தீங்கு என்றாலும் எதிர்பாராமல் ஒன்று அல்லது இரண்டு விதைகளை உண்டால் பயம் எதுமில்லை. அதிகளவில் உட்கொள்ளப்படுவதால் மட்டுமே உயிருக்கு ஆபத்து. மேலும், இதனால் ஆப்பிளே உண்ணக்கூடாது என்று கூறுவது பொருத்தமற்ற ஒன்று.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader