This article is from Oct 09, 2019

ஆப்பிளில் உள்ள ஸ்டிக்கர் எண்கள் எதைக் குறிக்கிறது ?| PLU கோட் அறியுங்கள்.

பரவிய செய்தி

ஆப்பிள்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் குறிப்பிடுவது என்ன ?

  • 4011 (4 இலக்கம்) 4-ல் தொடங்கினால் ரசாயனம் மருந்து தெளிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பழம்.
  • 84011 (5 இலக்கம்) 8-ல் தொடங்கினால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவை.
  • 94131 (5இலக்கம்) 9-ல் தொடங்கினால் இயற்கையில் வளர்க்கப்பட்ட பழம்.

மதிப்பீடு

விளக்கம்

நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை முற்றிலும் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்டவை என உறுதி அளிக்க முடியாத காலத்தில் இருக்கிறோம். தற்பொழுது, ஆர்கானிக் முறையில் விளைந்தது என்றால் தான் மக்களே ஆர்வமாய் வாங்க முன் வருகின்றனர். 

குறிப்பாக, பழங்களில் இயற்கையான, மரபணு மாற்றப்பட்டவை என பிரிந்து இருப்பதை அறிவோம். பெரிய கடைகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பழங்களை கண்டால் தரமானவை என சிலர் நினைக்கின்றனர். இன்னும் சிலர் ஸ்டிக்கர்கள் இருந்தால் மெழுகு பூசி இருப்பார்கள் என்ற பயத்தில் இருப்பார்கள். இப்படி பல்வேறு குழப்பங்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் இருக்கும் ஸ்டிக்கர்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும் எண்களை கொண்டு இயற்கையாக விளைந்ததா அல்லது செயற்கை முறையில் ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவையா அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்டவையா என அறிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டு உள்ளனர். முதலில் வழக்கமான உணவுகள் குறித்து அறிந்து கொள்ளுவோம்.

வழக்கமான உணவுகள் (Conventional foods ) : 

நாம் உண்ணும் வழக்கமான உணவுகள் விவசாய முறையைப் பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுகின்றனர். அவற்றிக்கு பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற செயற்கை இரசாயனங்கள் மண்ணில் உறிஞ்சப்படுகின்றன. இது அடுத்த விளைபொருளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதிக உற்பத்திக்கு ஒரேமுறையை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் பயிர்கள் ஒரே இடத்தில் நடப்படுகின்றன. இதுவே வழக்கான உணவுகள் குறைவான ஆரோக்கியம் கொண்டிருக்க காரணமாகிறது .

ஸ்டிக்கர்கள் மற்றும் லேபிள்கள் : 

சந்தையில் விற்கப்படும் ஆப்பிள்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்கள் மற்றும் லேபிள்கள் , பொருளானது ஃப்ரெஸ் , பதப்படுத்தப்படாத உணவுகள் மற்றும் குறியீட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக, PLU (price look up ) குறியீடுகள் ஆனது உற்பத்தி தரங்களுக்கான சர்வதேச கூட்டமைப்பால் (IFPS) நிர்வகிக்கப்படுகிறது . இந்த PLU குறியீடுகள் 1990-களில் இருந்தே சூப்பர் மார்க்கெட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவை சரிபார்க்க, சரக்கு கட்டுப்பாட்டை எளிதாக்கவும், வேகமாக மற்றும் துல்லியமாக செய்கின்றன.

IFPS தரநிலை படி, 4 இலக்க எண்கள் வழக்கமான முறையில் உற்பத்தி செய்தவை மற்றும் 5 இலக்க எண்கள் இயற்கையான அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டவை. ஒருவேளை, மரபணு மாற்றம் செய்யப்பட்டவையாக இருந்தால் உணவு பொருளின் 4 இலக்க எண்களுக்கு முன்பாக ” 8 ” என்ற எண் இடம்பெற்று இருக்கும். அதே, 4 இலக்க எண்களுக்கு முன்பாக ” 9 ” என்ற எண் இடம்பெற்று இருந்தால் இயற்கையான உற்பத்தி எனக் குறிப்பிடுகின்றனர். PLU குறியீடுகள் ஒவ்வொரு உணவு பொருளுக்கும், அதன் வகையை சார்ந்து பிரித்து வழங்கப்பட்டு உள்ளன.

ஆனால், முக்கியமான கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், சில உற்பத்தியாளர்கள் மட்டுமே இந்த மாதிரியான குறியீடுகளை பயன்படுத்துகின்றன. மேலும், PLU குறியீடுகள் நுகர்வோர் பயன்களுக்கு வடிவமைக்கப்படவில்லை. எனினும், தெரிந்து கொள்வது அடுத்தமுறை பார்த்து வாங்க உதவும்.

சூப்பர் மார்க்கெட்களில் சிலவற்றில் மட்டுமே பழங்கள் மீது குறியீடுகளை கொண்ட ஸ்டிக்கர்கள் இடம்பெறுகின்றன. இது அனைத்திற்கும் உதவ வாய்ப்பில்லை. குறிப்பிட்ட உணவு பொருளானது எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ள விருப்பினால், அதில் இடம்பெற்று ” GMO-FREE ” , ” non-GMO ” அல்லது ” 100% ஆர்கானிக் ” என்ற வார்த்தைகளை வைத்து அறிந்து கொள்ளலாம். GMO என்ற வார்த்தைகளை வைத்து மரபணு மாற்றம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, பழங்களில் இருக்கும் 4 மற்றும் 5 இலக்க எண்களை வைத்து, அவை இயற்கையாக விளைந்ததா அல்லது ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவையா அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்டவையா என்பதை அறிந்து கொள்ளலாம். எனினும், இந்த குறியீடுகளை அனைத்து உற்பத்தியாளர்களும் பயன்படுத்துவதில்லை.

PLU குறியீடுகள் குறித்து மேலும் விவரமாக அறிந்து கொள்ளலாம். மேலும் , மரபணு மாற்றம் செய்யப்பட்டவையா என்பது குறித்து பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருளில் குறிப்பிட்டு இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader