அரபு நாடுகள் இந்தியாவிற்கு அளித்த ஆக்சிஜனை பிற பகுதிக்கு கொண்டு செல்லும் வீடியோவா ?

பரவிய செய்தி

இந்தியா வந்தடைந்தது அரபு நாடுகள் அனுப்பிய 80 மெட்ரிக்டன் ஆக்ஸிஜன் தற்போது வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்படுகிறது.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் அனுப்பி உதவுவதாக தகவல்கள் வெளியாகின.

Advertisement

இந்நிலையில், ” அரபு நாடுகள் இந்தியாவிற்கு அனுப்பி வைத்த 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வந்தடைந்த பிறகு வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்படுகிறது ” என ஆக்சிஜன் டேங்கர் வாகனம் அடங்கிய ரயில் செல்லும் 29 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், ” Maharashtra: Oxygen Express with 7 empty tankers leaves for Vizag ” எனும் தலைப்பில் ஏப்ரல் 20-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.

ஏப்ரல் 19-ம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ட்விட்டர் பக்கத்தில், ” கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ரயில்வே தனது முதல் ஆக்சிஜன் எஸ்பிரெஸை இயக்குகிறது. 7 காலியான டேங்கர்களுடன் ரோ-ரோ சேவை இன்று மகாராஷ்டிராவின் கலம்போலியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டது ” என வீடியோ உடன் பதிவாகி இருக்கிறது.

Advertisement

Archive link 

2021 ஏப்ரல் 1-ம் தேதி மகாராஷ்டிராவின் கலம்பொலி பகுதியில் இருந்து 7 காலி டேங்கர்கள் அடங்கிய ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினத்திற்கு இயக்கப்பட்டு இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் தொழிற்சாலையில்   மருத்துவ ஆக்சிஜனை நிரப்பிய பிறகு மீண்டும் மும்பைக்கே திரும்பி விடும் என செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

Archive link 

” இந்தியாவின் தூதரகம் அதானி குழுமம் மற்றும் எம்/எஸ் லிண்டேவுடன் இணைந்து 80MT திரவ ஆக்சிஜனை இந்தியாவுக்கு அனுப்புவதில் பெருமிதம் கொள்கிறது ” என கடல்மார்க்கமாக ஆக்சிஜன் அனுப்பப்படும் புகைப்படங்கள் உடன் சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 24-ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், அரபு நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 80 மெட்ரிக்டன் ஆக்ஸிஜன் வட இந்தியா பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாக வைரல் செய்யப்படும் வீடியோ இந்திய ரயில்வே விசாகப்பட்டினத்தின் தொழிற்சாலையில் இருந்து ஆக்சிஜனை நிரப்பி வர காலியான டேங்கர்களை கொண்ட ரயிலை மகாராஷ்டிராவில் இருந்து அனுப்பிய போது எடுக்கப்பட்டது.

சவுதி அரேபியாவில் இருந்து 80 மெட்ரிக்டன் ஆக்ஸிஜன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது உண்மையே. ஆனால், அரபு நாடு அளித்த ஆக்சிஜன் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக பரவும் வீடியோ தவறானது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button